லட்சுமி மேனனிடம் கேளுங்கள்



விஷாலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்களை தொட்டுப் பார்க்க ஆசை. சம்மதிப்பீர்களா?
 எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
ஊகூம். அது பெரிய தப்பு. என்னை நேரில் பார்க்கலாம், பேசலாம், கை குலுக்கலாம், போட்டோ எடுத்துக்கொள்ளலாம். தொட்டுப் பார்க்க அனுமதி இல்லை. நான் உங்கள் சகோதரி மாதிரி.
 
‘நஸ்ரியாதான் எனக்கு போட்டி’ என்று பகிரங்கமாக சொல்வது ஏன்?

இப்போது வந்துள்ள நடிகைகளில், நஸ்ரியாவைப் பார்க்க ஹோம்லியாக, ரொம்ப அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். எனவே, அவர்தான் எனக்கு போட்டி என்று சொன்னேன். இன்று மட்டுமல்ல, என்றுமே அவரைத்தான் என் போட்டியாளராக நினைப்பேன்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்குவீர்களா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நான் நடிகையாவேன் என்று கனவு கூட கண்டதில்லை. அப்படிப்பட்ட என்னிடம், தேசிய விருது வாங்குவீர்களா என்று கேட்கிறீர்களே. எந்த விஷயமும் அதுவாக நடந்தால்தான் நல்லது. அதிக எதிர்பார்ப்பு, கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும்.

நீங்கள் அம்மா செல்லமா, அப்பா செல்லமா?
 ப.முரளி, சேலம்.
அம்மா உஷா மேனனின் செல்லம். எவ்வளவு செல்லம் கொடுப்பாரோ, அவ்வளவு கண்டிப்பும் கூட.
 
அதிர்ஷ்டம், திறமை, அழகு. எதை அதிகம் நம்புகிறீர்கள்?

திறமையும், அழகும் இருந்தால் போதும். அதிர்ஷ்டம் தானாகவே தேடி வரும்.
 
மலையாள வரவான நீங்கள், தமிழகத்தில் பிரபலமாகி விட்டீர்கள். தமிழ் ரசிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- ஆர்.கார்த்திகேயன், அண்ணாநகர் கிழக்கு.
தமிழ் ரசிகர்கள் சினிமா நடிகர், நடிகைகள் மீது அளவற்ற பாசத்தையும், நேசத்தையும் பொழிகிறார்கள். மலையாள ரசிகர்களை விட தமிழ் ரசிகர்கள் சினிமா பார்த்து ரசிப்பதை பெரிதும் விரும்புகிறார்கள். நட்சத்திரங்களின் நடிப்பை மனதாரப் பாராட்டுகிறார்கள். சிறப்பாக நடித்திருந்தால் வெளிப்படையாகப் பாராட்டும் அவர்கள், ரொம்ப சாதாரணமாக நடித்திருந்தால், டார் டாராக கிழித்துப் பேசவும் தயங்குவதில்லை. தமிழ் ரசிகப் பெருமக்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
 
ஒரு ஹீரோவுடன் அடுத்தடுத்து இணைந்து நடித்தாலே காதல் கிசுகிசு வந்துவிடுகிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.
நினைப்பதற்கு என்ன இருக்கிறது? அது வெறும் கிசுகிசு என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே. பிறகு எப்படி அதில் உண்மை இருக்கும்? ஒரு ஹீரோவும், ஹீரோயினும் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தால், உடனே அவர்கள் காதலிக்கிறார்கள் என்று மீடியாக்கள் எழுதுகின்றன. இந்தக் கேள்வியை அவர்களிடம் போய் கேளுங்கள். கேட்டால், ‘சும்மா பப்ளிசிட்டிக்கு எழுதுகிறோம்’ என்று சொல்லி நழுவுவார்கள்.

உங்கள் பிளஸ், மைனஸ் பாயின்ட் என்ன?
 அ.முரளிதரன், மதுரை.
பிளஸ் பாயின்ட் - யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் நான் ரொம்ப ஈசியாக பேசிப் பழகி ஃபிரெண்டாகி விடுவேன். மைனஸ் பாயின்ட் - எங்கிருந்து கோபம் வருகிறது என்றே தெரியாது. திடீர், திடீரென்று வரும் கோபம் உறுத்துகிறது.

உங்கள் நடிப்பை வீட்டில் யார் விமர்சிப்பது வழக்கம்?
மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்.
இதுவரை நான் நடித்து ரிலீசான படங்களில், என் நடிப்பு குறித்து ஒருமுறை கூட அம்மா பாராட்டியது இல்லை. ஆனால், குறைகளை மட்டும் கண்டுபிடித்து, விமர்சனம் என்ற பெயரில் கண்டபடி திட்டிக் கொண்டிருப்பார்.

விஷாலைப் பற்றி சொல்லுங்கள்?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
அற்புதமான காமெடி சென்ஸ் உள்ள நல்ல மனிதர். நான் ஜூனியர். அவர் சீனியர். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் பழகுவார். இணைந்து நடிப்பதற்கு ரொம்ப கம்பர்ட்டபிளான ஹீரோ. எந்த விஷயத்தையும் செம ஜாலியாகவும், ஃபிரெண்ட்லியாகவும் பேசக்கூடிய நல்ல நண்பர். 

(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்