உலகின் செக்ஸியான உதடுக்கு சொந்தக்காரர்



‘ஜாக்பாட்’ படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்தார் ''ஏ'' பட ஹீரோயின் சன்னி லியோன். இதனால் அதிர்ந்த அவரது ரசிகர்கள் படத்தை புறக்கணித்துவிட்டனர். படம் பாக்ஸ் ஆபீசில் டப்பா டான்ஸ் ஆடிவிட்டது.

சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஷாஹித் கபூர் பங்கேற்றார். அவரிடம் கைகுலுக்க பெண் ரசிகைகள் முண்டியடித்தனர். அவர்களை தடுப்பதுபோல் நடித்து ஷாஹித்தின் பாதுகாவலர் இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார். போலீசில் புகார் தந்துவிட்டார் இளம்பெண்.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கும் ‘ஹேப்பி நியூ இயரில்’ பிரபுதேவா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். இந்த படத்தை இயக்குபவர் மற்றொரு டான்ஸ் மாஸ்டர் பர்ஹா கான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வந்த ஆமிர்கான், பாலசந்தரை அவரது வீட்டில் சந்தித்தார். 3 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த விழாவில் ‘‘தாரே ஜமீன் பர்’ படம் இயக்கிய ஆமிர் என்னைவிட சிறந்த இயக்குநர்Õ என பாலசந்தர் பாராட¢டினார். அதன் வீடியோ சிடியை தனது நண்பர்களுக்கு போட்டு காட்டியதாக பாலசந்தரிடம் தெரிவித்தார் ஆமிர்.

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் இடையிலான நெருக்கம் குறைந்து வருகிறது. ‘குண்டே’ படத்தில் நடிக்கும்போது ரன்வீருடன் பிரியங்கா சோப்ரா நெருங்கி பழகியதாலே தீபிகாவிடம் இந்த மாற்றமாம்.

உலகிலேயே செக்ஸியான உதட்டுக்கு சொந்தக்காரி என பெயர் பெற்றவர் கேத்ரினா கைப். அவரிடம் இன்னும் உங்கள் உதடு கவர்ச்சியாகவே இருக்கிறது என நினைக்கிறீர்களா என நிருபர் கேட்டபோது, ''அதை ரன்பீர் கபூரிடம்தான் கேட்க வேண்டும்'' என தில் பதில் அளித்திருக்கிறார் கேத்ரினா.

- ஜியா