விருது இயக்குநர்



‘புவனக்காடு’ படத்தின் இயக்குநர் வி.எம்.மோகனின் துணிச்சலை பாராட்டி தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு விருது கொடுத்து கவுரவித்துள்ளது. காரணம் இவர் யாரிடமும் உதவி இயக்குநராகவோ, குறும்படமோ இயக்கியதில்லை. அவ்வளவு ஏன் இவர் கனவில் கூட சினிமா படப்பிடிப்பை  வேடிக்கை பார்க்காதவர். தன்னம்பிக்கையை துணையாக கொண்டு இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

விக்னேஷ் இதன் நாயகன். திவ்யா நாகேஷ் நாயகி. பாண்டு, கராத்தே ராஜா, நிழல்கள் ரவி, அனுமோகன் ஆகியோரும் இருக்கிறார்கள். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்பதுதான் படத்தின் கதை. ‘‘ஒருவகையில் இந்தப் படம் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் என்று கூட சொல்லலாம். இயக்குநர் மோகன் யாரிடமும் நான் உதவி இயக்குநராக வேலை செய்யவில்லை என்று சொன்னபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், முழு கதையையும் கேட்ட பிறகு மோகன் மீதும் கதை மீதும் நம்பிக்கை வந்தது. இது பேமிலி சப்ஜெக்ட் படமாக இருந்தாலும் ஜனரஞ்சகமாக இருக்கும்...’’ என்கிறார்

விக்னேஷ்.- எஸ்