பஸ் காதல்



எஸ் அண்ட் எஸ் ட்ரீம் மேக்கர்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் ‘ஆறு சக்கர குதிரை’. புதுமுகம் ஜெய்சத்யா இதன் நாயகன். அபினிதா இதன் நாயகி. இவர்களோடு ராஜ்முரளி, வணக்கம் ராஜா மற்றும் பலர். ஒளிப்பதிவு சாய்நாதா. இசை ஜூன் ஹீரே. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் செந்தில் சுவாமிநாதன். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்களின் போக்குவரத்து அவசியத்தை காசாக்க நினைக்கும் சிலர் பர்மிட் இல்லாத பஸ்களை இயக்கி லாபம் பார்ப்பதை மையமாகக் கொண்ட கதை.

முழுப் படமும் பஸ்ஸுக்குள் நடைபெற்றாலும் கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான காதல், டூயட், சண்டை என அனைத்தும் இருக்குமாம். கண்டக்டர் வேடத்தில் நடிக்கும் ஜெய்சத்யா தன்னுடைய கேரக்டரை மெருகேற்ற தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கண்டக்டர்களின் மேனசரித்தை ஸ்டடி பண்ணினாராம். ‘‘தமிழில் இதுவரை நான் ஆறேழு படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்...’’ என்கிறார் அபினிதா.

- ரா