சாதனைகள் புரிய அருளும் தவரிதா நித்யா



திதி நித்யா மண்டலத்தின் நடு நாயகியாய்த் திகழ்பவள் இத்தேவி. சுக்ல பட்சத்திலிருந்து எட்டாவது நித்யா, கிருஷ்ண பட்சத்திலிருந்தும் எட்டாவது நித்யாவாகத் திகழும் பெருமை பெற்றவள் இவள். இந்த நித்யாவிற்கு தோதலாதேவி என்ற திருப்பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரம் அருள்வதால் ‘‘த்வரிதா’’ என்று அழைக்கப்படு கிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் அணிகலன்களாக சூடியருள்கிறாள்.

கருநீல வண்ண உடல் நிறத்தைக் கொண்டவள் இவள். முக்கண்களுடனும், நான்கு திருக்கரங்களுடனும் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் பொலிகிறாள். கால்களில் கொஞ்சும் சதங்கை யும், இடையில் மேகலையும், மேனியில் மின்னும் ரத்னாபரணங்கள் துலங்க அருள்கிறாள். தன் சிரசில் மயிற்பீலிகளைச் சூடிக் கொண்டு அலங்கார தரிசனம் அளிக்கிறாள். தேவியின் வரத அபய கரங்கள் பக்தர்களைக் காக்க நான் இருக்கிறேன் என்பதைக் கூறாமல் கூறுவது போல் உள்ளது. இத்தேவியைத் துணை கொள்வோர்க்கு அணிமாதி ஸித்திகளும், ஞானமும் கை கூடும் என்பர்.

அரை நொடியேனும் அன்னையை மனதில் நினைப்போர்க்குத் துன்பமும் உண்டோ? கருணை வடிவான இந்த அம்பிகை தாங்க முடியாத வேதனையில் வருந்தும் உயிர்களை அணைத்து
ஆதரிப்பவள். சாதனைகளைச் செய்ய அருள்பவள். நம்பினோர்க்கு அபயம் தருபவள். அழகுப் பெட்டகமாய் அருளும் பேரரசி. எந்த ஒரு குழந்தையும் தன் தாயாரைப் போல பேரழகி உண்டா எனத்தான் கூறும்.

ஸர்வாங்க சுந்தரியான இந்த ஜகஜ்ஜனனியின் பேரழகையோ ஆதிசங்கரரே கூறுவது போல நான்முகனான பிரம்மனாலோ, ஐந்து முகனான பரமேஸ்வரனாலோ, ஆறுமுகனான ஷண்முகனாலோ, ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷனாலோ கூட வர்ணிக்க இயலாதது. மற்றவர்களின் கதியென்ன? இருப்பினும் வாக் தேவதைகள் தேவியின் அருளால் தேவியின் அழகினை அடுத்து வர்ணிக்கின்றனர்.

ஜிதேந்திரியராக காமனையே கண்ணால் பொசுக்கிய காமேஸ்வரரே மயங்கும் அழகுடைய அன்னையின் அழகை அவளது தாயன்பை முக்கியமாகக் கூறியதை இங்கு பார்க்கலாம்.

இயற்கையிலேயே தேவியின் கூந்தலுக்கு நறுமணம் உண்டு என்பதை நிலைநாட்ட அந்தப் பரமேஸ்வரனே நக்கீரருடன் வாதிட்டாரல்லவா? அந்த கூந்தலில் செண்பகம், அசோகம், புன்னாகம், ஸௌகந்திகம் என்ற நறுமணம் மிக்க மலர்களைச் சூடிக்கொண்டிருக்கிறாளாம் அன்னை.

அதன் மேல் பத்மராக மணிகள் வரிசையாகப் பதிக்கப்பட்ட ஒளிவீசும் அழகிய கிரீடத்தை அணிந்திருக்கிறாளாம். அஷ்டமி தின சந்திரன் போல இந்த அஷ்டமி தின தேவதையான த்வரிதாவின் நெற்றி அழகுற விளங்குகிறதாம். சந்திரன் எனக் கூறும் போதே அதிலுள்ள களங்கமும் நினைவில் வருகிறதல்லவா? அந்தக் களங்கம் போல் அம்பிகையின் கஸ்தூரிப் பொட்டு விளங்குகிறதாம்.

அழகின் உருவம் மன்மதன் வசிக்கும் மங்கள வீடாக அம்பிகையின் முகமண்டலம் விளங்குவதால் அதன் வாயில் தோரணம் போல் அவளது புருவங்கள் விளங்குகின்றனவாம். அந்த முகத்தின் அழகு வெள்ளத்தில் நீந்தும் மீன்களைப் போல அவளது கண்கள் விளங்குகின்றனவாம். காது வளர நீண்டிருக்கும் அந்தக் கண்களால் எந்த திக்கிலும் இருக்கும் தனது குழந்தைகளை ஒரு தாய் மீன் தனது பார்வையாலேயே குஞ்சுகளைக் காப்பது போல இந்த தேவியும் காக்கின்றாளாம்.

அன்றலர்ந்த செண்பக மலர் போல அவளது மூக்கு விளங்குகின்றதாம். அதில் நக்ஷத்திரத்தினும் ஒளி மிகுந்த மூக்குத்தியை அணிந்திருக்கிறாளாம் இந்தத் தாய்.  மனோஹரமான கதம்ப மலரை செவிப்பூவாக அணிந்திருக்கிறாளாம். சந்திர  சூர்யர்களை செவிகளில் தாடங்கங்களாக அணிந்திருக்கிறாளாம் அன்னை. இந்த தாடங்கங்களின் மஹிமையாலன்றோ ஆலகால விஷத்தை அருந்திய போதிலும் அவளது கணவரான காமேஸ்வரர் பிரளயங்களையும் தாண்டி கவலையற்று அன்னை ஒருத்தி மட்டுமே காண ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்!

பத்மராகக் கல்லினாலான கண்ணாடியை விடவும் பிரகாசமாக அன்னையின் கன்னங்கள் மின்னுகின்றனவாம். அவற்றில் பிரதிபலிக்கும் தாடங்கங்களால் நான்கு சக்கரங்களை உடைய மன்மதனின் தேர் போல அவளது முகம் விளங்குகின்றதாம். புதிய பவழத்தை விட, கோவைப்பழத்தை விட ஒளி பொருந்தியவையாக அவளது உதடுகள் விளங்குகின்றனவாம். க்ஷோடஸாக்ஷரி (16)போன்று இரு வரிசைப் பற்கள் விளங்குகின்றனவாம்.

அவள் தரித்திருக்கும் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேஸரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த கற்பூர வீடிகா எனும் நறுமணம் மிக்க தாம்பூலம் எத்திக்கிலுள்ளோரையும் கவர்ந்து இழுக்கின்றதாம். இந்த தாம்பூலச் சாறேயல்லவா பிறவி ஊமையையும் மூகஸங்கரராக மாற்றியது! முப்புரம் ஜெயித்த பரமேஸ்வரனது கீர்த்தியை அன்னை முன் பாட ஆரம்பித்து தனது கச்சபி எனும் வீணையை ஸ்ருதி சேர்த்த ஸரஸ்வதியும் வெட்கித் தனது வீணையை மறுபடி உறையிலிட்டு வைக்குமாறு செய்த வீணையைப் பழித்த இனிய குரலை உடையவளாதலால் அன்னையின் ஓர் “ஆஹா’’காரம் கூட வீணையின் நாதத்தைவிட இனியதாக இருக்கின்றதாம்,  காமேஸ்வரரையே சொக்கி மூழ்கும்படி அன்னையின் புன்சிரிப்பு பிரவஹிக்கிறதாம்.

அவளது முகவாயோ உவமையற்றதாக விளங்குகிறதாம்.  காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் அவளது கழுத்து பிரகாசிக்கின்றதாம். பொன் தோள்வளைகளும், ரத்தினப் பதக்கத்துடன் கூடிய முத்து அட்டிகையும் அன்னை தரித்திருக்கிறாள். ரத்ன கலசம் போன்ற தனது ஸ்தனங்களைக் கொடுத்து காமேஸ்வரரது, பிரேமையை விலைக்கு வாங்கி விட்டவளாக விளங்குகிறாளாம் அன்னை. இந்த ஸ்தனங்களன்றோ விநாயகரை கணேஸராகவும், முருகனை தேவ ஸேனாதி பதியாகவும், திருஞானஸம்பந்தர், ஆதிசங்கரர் போன்ற திராவிட சிசுக் களை மஹான்களாகவும், மஹா
கவிகளாகவும் தனது பாலால் மாற்றியது!

அவளது குழந்தைகளான நாம் அடுத்து மற்ற தெய்வங்களால் கைகளாலும் தரமுடியாத அளவுக்கு தனது கால்களாலேயே தரும்  அன்னை யின் கால்களுக்குத் தாவுவோம். தன் பாதங்களில் வணங்குவோரின் அகத்திலுள்ள இருளைத் தனது நகங்களின் காந்தியினால் அன்னை போக்கி விடுகிறாளாம்.

தாமரையினும் அழகுவாய்ந்த பாதங்களில் ஒலிக்கும் ரத்தினப் பரல்கள் கொண்ட சிலம்புகளணிந்து மெல்லிய தனது நடையினால் ஹம்ஸங்களுக்கும் நடைபழகக் கற்றுக் கொடுக்கிறாளாம் அன்னை.

இவ்வளவு பேரெழிலொடு இன்பமான அமைதி தரும் தேவியின் திருவடித் தாமரைகளை தியானித்து வணங்க, அறிவு தெளிவு பெறும். ஆற்றலோடு சிவனருளும் ஜீவன் முக்தியும் கிட்டும். வழிபடு பலன் சகலவித பயங்களும் இத்தேவியை நினைத்த மாத்திரத்திலேயே நாசமடையும். கலைகளில் தேர்ச்சி பெறவும், பூரண ஆயுளுடன் திகழவும் அருள்பவள் இவள். செல்வமும், உடல்நலமும் பெருகும். கற்கும் வித்தை சிறக்கும்.

த்வரிதா காயத்ரி
ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ரூம் ஹ்ரீம் ஹும் கே ச சே க்ஷ:
ஸ்த்ரீம் ஹும் க்ஷேம் ஹ்ரீம் பட் ரூம் த்வரிதாயை நம:
த்யான ஸ்லோகங்கள்
ச்யாமவர்ணாம் சுபாகாராம் நவயௌவன
 சோபிதம்
த்வித்விக்ரமாதஷ்ட நாகை:

கல்பிதாபரணோஜ்வலாம்
தாடங்கமங்கதம் தத்வத்ரசனா நூபுராந்விதை:
விப்ர க்ஷத்ரிய விட்சூத்ர ஜாதிபிர்பீம
 விக்ரஹை:
பல்லவாம் சுக ஸம்வீதாம் சிகிபுச்சக்ருதை:

சுபை:
வலயைர் பூஷிதபுஜாம் மாணிக்க
மகுடோஜ்வலாம்
வர்ஹிவர்ஹ கர்மாபீடாம் தச்சத்ராம்
தத்பதாகிநீம்
குஜ்ஜாகுண வஸத்வக்ஷ:

குசகுங்கும மண்டநாம்
த்ரிநேத்ராம் சாருவதநாம்
மந்தஸ்மித முகாம்புஜாம்
பாசாங்குச வராபீதி லஸத்புஜ
 சதுஷ்டயாம்
த்யாவைவம் தோதுலாம் தேவீம்
 பூஜயேச்சக்திபிர்வ்ருதாம்.

ரக்தாரவிந்த ஸங்காச ம்ருத்ய்ஸ்
ஸூர்ய ஸமப்ரபாம்
தத்தீம் அங்குசாம் பாசாம்
 பாணான் சாபம் மனோகராம்
சதுர்ப்புஜாம் மஹாதேவீம் ஸப்த
 மப்ஸரேகண ஸங்குலாம்
நமாமி த்வரிதாம் நித்யாம் பக்தா
நாமபயப்ரதாம்.

ஸ்யாமாங்கீம் ரக்த ஸத்பாணி
 சரணாம்புஜ ஸோபிதாம்
விருஷவாஹி ஸமஜ்ஜீராம் படா
கண்ட ரத்ன விபூஷிதாம்
ஸ்வர்ணாம் ஸுகாம் பாண

 (ஸ்வர்ண) பூஷாம் வேஸ்யாஹி
 த்வந்த்வமேகலாம்
தனுமத்யாம் பனிவ்ருத்த
 குசயும்மாம் வராபயே
தததீம் ஸிகிபிச்சாபாம் வலயாங்
கத ஸோபிதாம்

குஞ்ஜாருணாம் ந்ருபாஹீந்த்ர
 கேயூராம் ரத்ன விபூஷிதாம்
த்விஜநாக ஸ்பரத்கர்ண பூஷாம்
 மத்தரூணேக்ஷணாம்
நீல குஞ்சித தம்மில்ல வனபுஷ்பாம்

 கலாபினீம்
கைராதீம்ஸிகி பிஞ்சாட்ய
நிகேதன விராஜிதாம்
ஸ்பரத்ஸிம்ஹான ப்ரௌடாம்
 ஸம்ஸ்மரேத் த்வரிதாம் பத:
ந ஜானாமி மந்த்ரம் நஹி சக்ர பூஜாம்
ந ஜானாமி ஹோமம் நஹி யோக தீக்ஷாம்
ந ஜானாமி முத்ராம் நஹி
வேத சாஸ்த்ராம்

த்வதங்க்ரியுக்மம் த்வரிதாம்
 மனஸா ஸ்மராமி.
ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸூக்த ஸம்ஸ்துதாம் ரூகார
ப்ரக்ருதிக சசினீ கலாத்மிகாம்
ஸ்ரீத்வரிதா நித்யா ஸ்வரூபாம்
ஸர்வரோக ஹர சக்ர ஸ்வாமினீம்
கந்தாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம்

ஸ்ரீவாமன வக்ஷஸ்தல
கமலவாஸினீம்
ஸர்வமங்கள தேவதாம்
வித்யாலக்ஷ்மி ஸ்வரூப த்வரிதா
 நித்யாயை நம:
வழிபட வேண்டிய திதிகள்
சுக்ல பக்ஷ அஷ்டமி / கிருஷ்ண பக்ஷ அஷ்டமி
(அஷ்டமி திதி ரூப த்வரிதா நித்யாயை நம:)
நைவேத்யம்

முற்றிய தேங்காய்
பூஜைக்கான புஷ்பங்கள்
மரு, வில்வம்.
திதி தான பலன்
தேங்காய் நிவேதித்து தானம் செய்ய பல்வேறு
விதமான தாபங்கள் அகலும். தரித்திரம் தொலையும்.

பஞ்சோபசார பூஜை
ஓம் த்வரிதா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் த்வரிதா நித்யாயை தூபம் கல்பயாமி நம: 
ஓம் த்வரிதா நித்யாயை தீபம் கல்பயாமி நம:

ஓம் த்வரிதா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் த்வரிதா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம்

தர்சயாமி நம:இத்திதியில் பிறந்தோர் குண நலன்கள் பிறருக்கு தீங்கிழைத்து மகிழும் குணத்தைக் கொண்டவர்கள். நீச்சமான தொழில் புரிபவர். கபம் மிகுந்தவர். மனைவியுடன் கூடியவர். காமம் மிகுந்தவர். இத்திதியில் பிறந்தவர்கள் இந்த தேவியின் மூலமந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் தீமைகள் விலகி
நன்மைகள் பெருகும்.

யந்த்ரம் வரையும் முறை சந்தன குங்குமக் கலவையால் மேற்கில் வாயிலுடன் இரு சதுரங்கள் பின் இரு வட்டங்கள், எட்டிதழ்க் கமலம் கொண்ட சக்கரம் வரையவும். தேவியின் சக்திகளான ஹும்காரி, க்ஷேகாரி, சண்டி, சேதினி, க்ஷேபிணி, ஸ்ரீம், ஸ்ரீகரி, தும்காரி, க்ஷேமகரி, ஜயா, விஜயா எனும் சக்திகளை தியானித்து பூஜிக்கவும்.
இத்திதிகளில் செய்யத் தக்கவைஎதுவுமே இல்லை.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ அஷ்டமி துதி
அஷ்டமியும் அஷ்டகிலம் அஷ்ட நாகம்
அஷ்டகிரி அஷ்டகஜம் அஷ்டபாலன்
இஷ்டமுடன் அஷ்டதுர்க்கி அஷ்டகும்பம்
ஏற்றமாய் அஷ்ட ஆருயிரும் தானாய்
திட்டமுடன் அன்பர்களும் பெரியோர் வானோர்

செல்வியே அஷ்டதிக்கில் தெவிட்டாத் தேனே
துஷ்டருக்கும் இஷ்டருக்கும் தானாய் நின்ற
சோதியா மனோன்மணியே சுழுமுனை
வாழ்கவே!

அஷ்டகிலம் - எட்டு திக்கிற்குள் அடங்கிய எல்லா பூமிகளும்.
அஷ்டநாகம் - அனந்தன், கார்க்கோடகன்,
குளிகன், சங்கபாலன், தட்சன், பதுமன், மகா
பதுமன், வாசுகி.

அஷ்டகிரி - இமயம், ஹேமகூடம், கந்தமாதனம், மயிலை, எரிஷதம், நீலகிரி, மந்தாரம், விந்தியம்.
அஷ்டகஜம் - ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீபம்.
அஷ்டபாலகர்கள் - இந்திரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
அஷ்டதுர்க்கி - சைலபுத்ரி, பிரம்மசாரிணி,

சந்த்ரகண்டா, ஸ்கந்தமாதா, கூஷ்மாண்டா, காளராத்ரி, மஹாகௌரி, ஸித்திப்ரதா.
அஷ்டகும்பம் - அனந்தன், சூக்ஷ்மன்,
சிவோத்தமன், ஏகநேத்திரன், ஏகருத்ரன், த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்டன், சிகண்டி.
அஷ்ட ஆயிசர் -1008 சிவாலயத்திலுள்ள லிங்க மூர்த்திகள்.

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி தேவி துதி
திங்களொளியாய் அமர்ந்த சப்த கன்னி
தேவர்களுக்கமுதளித்த சிறு பெண்ணாத்தாள்
அங்கசித்தி ரீங்காரி அனந்த ரூபி
அண்டரெல்லாம் போற்ற அவதரித்த தேவி

மங்கலமாய் நவராத்திரி பூஜைக்காக
வந்தமர்ந்த திரிசூலி மகிழோங்காரி
துங்கமிகு முயர் பரமானந்தி தாயே
சோதிமனொன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே!

மாத்ருகா அர்ச்சனை
ஓம் த்வரிதாயை நம:
ஓம் தோதுலாயை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் கிராத்யை நம:
ஓம் கிருஷ்ண்யை நம:
ஓம் வாணிஜாயை நம:

ஒம் ஸர்வேஸ்வர்யை நம:
ஓம் த்ருவாயை நம:
ஒம் ஸர்வாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞான ஸமுத்பவாயை நம:
ஓம் த்ரிமாத்ராயை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் ஸர்வாகாராயை நம:

ஓம் அமேயாயை நம:
ஓம் ப்ரஹ்மாண்யை நம:
ஓம் ஸாந்திகர்யை நம:
ஓம் ஸர்வசக்த்யை நம:
ஓம் கௌமார்யை நம:
ஓம் விஸ்வஜனன்யை நம:
ஓம் ஸூலஹஸ்தாயை நம:
ஓம் மஹேஸ்வர்யை நம:

ஓம் கிங்கர்யை நம:
ஓம் ஸக்தி ஹஸ்தாயை நம:
ஓம் தக்ஷ யக்ஞ விநாஸின்யை நம:
ஓம் வராயுதாயை நம:
ஓம் ஸங்கவராயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் அவ்யக்தாயை நம:

ஓம் யோகின்யை நம:
ஓம் வாராஹ்யை நம:
ஓம் ந்ருஸிம்ஹாயை நம:
ஓம் ஸிம்மவிக்ரமாயை நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷ்யை நம:
ஓம் வீராராட்யாயை நம:
ஓம் ஸர்வபாபஹராயை நம:

ஓம் ஸிவாயை நம:
ஓம் ஸிவதூத்யை நம:
ஓம் கோராரவாயை நம:
ஓம் க்ஷூரிபாஸாஸிகாரிண்யை நம:
ஓம் விகரள்யை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் கபால்யை நம:
ஓம் பாபஹாரிண்யை நம:

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாகுக்ஷயே நம:
ஓம் யோகின்யை நம:
ஓம் ப்ருந்தவாதின்யை நம:
ஓம் ஷட்சக்ராயை நம:
ஓம் சக்ரநிலயாயை நம:
ஓம் சக்ரகாயை நம:
ஓம் யோனிரூபிண்யை நம:

ந.பரணிகுமார்