படுக்கை அறையில் கணினிப் பொறி இருக்கக்கூடாது!



வளம் தரும் வாஸ்து

வீட்டில் எத்தனையோ அறைகள். புகுமுக மண்டபம், சமையலறை, உணவருந்தும் இடம், பூஜை அறை, வரவேற்பறை, பொருள்கள் வைப்பறை, குளியலறை இப்படியும் இன்றைய நாளில் ஹோம் தியேட்டர் எனப்படும் வீட்டின் திரையரங்கு எனவும் உள்ளபோது படுக்கை அறைக்கு மட்டும் என்ன அவ்வளவு சிறப்பு எனில், படுக்கை அறை என்பது குடும்பத்தில் தம்பதி மட்டுமே புழங்கக்கூடிய  சிறப்பை தர முடியும்.

ஏனையவை அயலாருடன் பகிர்ந்து கொள்ள முடியும். படுக்கை அறை தம்பதி தம் குழந்தைகளுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் அமைதி, ஆனந்தம், களியாட்டம், தாம்பத்ய உறவு கொள்வது, பணத்தை சேமிப்பது, மறு தலைமுறையை உருவாக்குவது இப்படி பட்ட புனித செயல்களை உள்ளடக்கியதாக இருப்பதால் தான் படுக்கை அறையில் சிறப்புகள் பல வகையில் புகழப்படும்.

 மின்விசிறி படுக்கைக்கு நேர் மேலே (தலைக்கு மேல்) இருந்தால் அதிக தொந்தரவை தரும். மின் விசிறி மூலம் “ச்சீ’’ அங்கு இருப்பவர்களை பலவீனம் ஆக்கி விடும். தீய பலன்களை குறைக்க சிவப்பு புள்ளிகளை விசிறியில் பதியச் செய்யலாம்.தொலைக்காட்சி பெட்டி, மடிக்கணினி, மின் இசைக்கருவிகள்  போன்ற மின் காந்த அலைகளை அதிகமாக உற்பத்தி செய்யும்; ஓய்வு அறையான படுக்கை அறையை பாழ்படுத்திவிடும். பரிகாரமாக தொலைகாட்சி இயங்காத போது மூடி வைக்கலாம். வெளிச்சம் சரளமாக “ஷா’’வை ஏற்படுத்தி உறக்கத்தை கெடுக்கும்.

இதே போல் கணினியையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலுக்கு மிக அருகில் இருப்பதால் படுக்கையை முழுவதும் கெடுத்து விடும். கணினி வேலையை மற்ற அறையில் செய்து முடிந்த பின்னரே படுக்கை அறைக்கு வரவும்.இன்டர்நெட் தொடர்பு படுக்கை அறைக்கு இருப்பின் வெளி உலகத் தொடர்பை ஏற்படுத்தி “யின்’’ சூழ்நிலையை பாதித்து விடும்.
எனவே தொலைதொடர்பு சாதனங்களை முற்றிலுமாக படுக்கையில் தவிர்ப்பது மிக மிக நல்லது.

படுக்கை அறையை ஒட்டிய குளியலறை (BED ROOM ATTACHED BATHROOM) குளியலறையுடன் கூடிய படுக்கை அறை அமைக்கும் பொழுது  படுக்கை அறையின் முழு நீளம் / அகலத்திற்கும் குளியலறை இருக்க வேண்டும். படுக்கை அறையின் சிறு பகுதியை மட்டும் குளியலறை எடுத்துக் கொள்வதை பெங்சூயி தவறென சொல்கிறது.சரியான குளியலறை அமைப்பு    
தவறான படுக்கையறையுடன் கூடிய குளியலறை ஒரு பக்கத்தின் பாதியில் மட்டும் குளியலறை இருந்தால் படுக்கை அறையின் ஒரு மூலை வெட்டுப்படும்.

இதனால் 6 மூலைகள் அவ்வறைக்கு ஏற்பட்டு, சக்தி பிளவுப்பட்டு “யின்’’ சூழ்நிலையை பாதிப்படையச் செய்யும். எனவே வெட்டுப்பட்ட படுக்கை அறை நல்லதல்ல. வெட்டுப்பட்ட மூலை படுக்கை அறையை நோக்கி விஷ அம்புகளை வீசி அங்கு உள்ளவர்களை நிலைகுலையச் செய்யும் இதனால் “ச்சீ’’ போக முடியாத ஒரு இடமாக மாறி நற்சக்திகள் இல்லாத இடமாக மாறக்கூடுமாகையால் சரியான குளியலறை கொண்ட படுக்கை அறையை ஏற்படுத்த வேண்டும்.

பரிகாரமாக வெட்டுப்பட்ட பகுதியை கனமான திரைச்சீலை கொண்டு தடுத்து படுக்கை அறையை நான்கு மூலைகள் உள்ளதாகவும் வெட்டுப்பட்ட இடத்தில் “சிம்’’ என்று கூறப்படும் ஒலி எழுப்பும் மணியை கட்டி தொங்கவிட்டு நற்சக்திகள் வரச் செய்யலாம். சில வீடுகளில் படுக்கை அறையிலிருந்து குளியலறைக்கு படியேறி செல்வார்கள்.  இது முற்றிலும் தவறு.

குளியலறையை விட படுக்கை அறை தாழ்வாக இருக்க கூடாது. நீர் சொட்டும் ஓசையும் படுக்கைஅறையில் கேட்கக்கூடாது. இது படுக்கையறையில் இருப்பவரின் நற்சக்தியை கெடுத்து  “ச்சீ’’ பாதித்து உறக்கத்தை கெடுப்பதோடு, உறவில் விரிசல்களை ஏற்பட செய்யும்.இப்படிப்பட்ட கெடுபலன்கள் குறைய வேண்டுமாயின் “ கிஹிஜிளிவிகிஜிமிசி ஞிளிளிஸி’’ எனப்படும் சிலிளிஷிணிஸி கொண்ட கதவு அமைப்பை ஏற்படுத்தலாம்.மண்ணால் செய்யப்பட்ட மணிகளைத் தொங்க விட்டு நீர் சக்தியின் ஆற்றலைக் குறைக்கலாம்.     

‘ச்சீ’ என்பதும் நம் உணர்ச்சிகளும் ஒன்றுடன் ஒன்று பின்ணிப் பிணைந்தவை. தெளிவாக புரியும்படி கூறவேண்டுமெனில் ‘ச்சீ’  என்ற நல்ல சக்தி மற்றும் உணர்ச்சிகள் இரண்டரக்கலந்தவையாகும். கெடு உணர்ச்சிகள் “ச்சீ’’ யை பாதிப்படையச் செய்யும் “ச்சீ’’ உங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவையாகவும் இருக்கின்றன.நீங்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக, நம்பிக்கையாக, நேர்மறை எண்ணங்களை கொண்டவர்களாக உள்ளபோதும், பாதுகாப்பாக உள்ளதாக கருதும்போதும் இவை “ச்சீ’’ சக்தியை மென்மையாக நீர்வீழ்ச்சியாக உங்கள் உடலில் பரவச் செய்யும்.

மேலும் வேறுபாதையிலும் இவை பணியாற்றுகின்றன. அதாவது, உங்களின் “ச்சீ’’ ஆரோக்யமாகவும், வலுவாகவும் உள்ளபோது நீங்கள் அனைத்தும் கொண்டவராக கருதுகிறீர்கள் ஆனால், துக்ககரமாகவும், கோபப்படும்போதும், பயப்படும்போதும், நரம்புகள் புடைக்கும் போதும் மேலும் வேறுபல மனக்கவலைகள் வந்தடையும் போதும் “ச்சீ’’ பலமாக உடைபட்டு தூக்கி எறியப்பட்டு
உடலைவிட்டு மெதுவாக வெளியேறுகிறது.

சீன மருத்துவம் 7 மனகிளர்ச்சிகளை வரிசைப் படுத்துகிறது. இவை வாஸ்து பெங்சூயியின் பாதிப்புகளாலும், இவை திறம்பட உள்ளபோது “ச்சீ’’ சிகரத்தில் இருப்பதையும் உருதி செய்வதால் நம் வீடு வாஸ்து பெங்சூயி சூத்திரங்களால் ஆனந்த தாண்டவமாடினால் அந்த ஆனந்தம் நம் வாழ்விலும் நிலைக்கும்.

(தொடரும்)

வாஸ்து பாஸ்கர்