வெப்சீரிஸில் சிரஞ்சீவி..?



அப்படித்தான் ஏலுகுண்டலவாடா வெங்கடரமணா கோவிந்தா கோ...விந்தா தேசத்தில் கிசுகிசுக்கிறார்கள்.அதாவது எப்படி இந்தியில் முதன்முதலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சின்னத்திரையில் தோன்றினாரோ...
எப்படி தமிழில் கமலும் மலையாளத்தில் மோகன்லாலும் கன்னடத்தில் சுதீப்பும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்களோ -அப்படி இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒரு மாஸ் மெகா மகா ஹீரோவான, தான் வெப் சீரிஸில் ஒன்றில் நடித்து வரலாற்றில் பதிவாக வேண்டும் என மெகா ஸ்டார் சிரஞ்சீவி முடிவு செய்திருக்கிறாராம்.

சினிமாவில் கமர்ஷியல் அம்சங்கள், பன்ச் டயலாக்குகள் ஓகே... ஆனால், வெப் சீரிஸில் கன்டன்டுக்கே முதலிடம் என்பதால் அட்டகாசமான கதையை சீரு தேடி வருகிறார். கதைஅம்சம் வலுவாக இருந்தால் நெகட்டிவ் ரோலில் நடிக்கவும் அவர் தயார் என்பதுதான் ஹைலைட்.படா  படா  முன்னணி ஓடிடி நிறுவனங்கள் எல்லாம் ப்ளாங்க் செக்குடன் சிரஞ்சீவியை அணுகுவதாகச் சொல்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா