Must Watch



அனெக்

சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, குறைவான வசூலையே அள்ளியிருக்கும். அதே படம் ஓடிடியில் வெளியாகி பட்டையைக் கிளப்பும். அப்படியான ஒரு படம்தான் ‘அனெக்’.
‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த இந்திப்படம்.இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், தாங்கள் இந்தியர்களே இல்லை என்று ஒரு பிரிவினைவாதக்குழு இயங்கிவருகிறது. இதற்கு எதிராக இன்னொரு குழுவும் அங்கே செயல்பட்டுவருகிறது. அதனால் இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அமைதி சீர்குலைகிறது.

அங்கே அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தின் ரகசிய உளவாளி அமன் செல்கிறார். இதற்கிடையில், தான் இந்தியரே இல்லை என்கிற குழுவை வழி
நடத்துபவருக்கு ஐடோ என்று ஒரு மகள் இருக்கிறாள். சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை அவள். இந்தியாவுக்காக குத்துச்சண்டையில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது
அவளது கனவு.

அமைதியை நிலைநாட்டினாரா அமன்... தனது கனவை நனவாக்கினாளா ஐடோ... என்பதே திரைக்கதை.சமகாலத்தின் முக்கியமான அரசியல் படமாக மிளிர்கிறது ‘அனெக்’. உண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது திரைக்கதை. அமனாக ஆயுஷ்மான் குரானா பின்னியிருக்கிறார். படத்தின் இயக்குநர் அனுபவ் சின்ஹா.

தொகுப்பு: த.சக்திவேல்