தத்துவம் மச்சி தத்துவம்





‘‘தலைவர் எல்லாருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லிக்கிட்டிருந்தவரு, ஒருத்தர்கிட்ட மட்டும் கைநீட்டி கை குலுக்கிட்டுப் போறாரே..?’’
‘‘அந்த ஆள் மட்டும்தானே மோதிரம் போட்டிருந்தான்..!’’
- டி.சேகர், திருத்துறைப்பூண்டி.

‘‘யோவ் சர்வர்... என்னய்யா சாம்பார்ல பல்லி செத்துக் கிடக்கு?’’
‘‘ஸாரி சார்... நீங்க உயிரோட ஆர்டர் பண்ணியிருந்தீங்களா?’’
- ஏ.ஸ்ரீதர், பொன்மேனி புதூர்.

‘‘தலைவருக்கு வந்தது ரொம்ப சின்ன குற்றப் பத்திரிகைன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘அஞ்சல் அட்டையில அனுப்பியிருக்காங்களே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘மக்களோட வாங்கும் சக்தி அதிகரிச்சிடுச்சுன்னு தலைவர் எதை வச்சு சொல்றார்..?’’
‘‘முன்னே அவர்
போஸ்டர்ல சாணி எடுத்து அடிச்சவங்க, இப்போ ‘பீட்ஸா’ எடுத்து அடிக்கிறாங்களாம்..!’’
‑- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

டாக்டர் தர்ற எல்லா ரிப்போர்ட்டையும் நாம பார்க்கலாம்; ஆனா, போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட்டை மட்டும் நாம பார்க்கவே முடியாது!
- ஊசி என்றாலே ஓடி ஒளிவோர் சங்கம்
-பாலாஜி கணேஷ்,
கோவிலாம்பூண்டி
.

விளக்கெண்ணெயை விளக்கில் ஊற்றலாம், தப்பில்லை. ஆனால் மண்ணெண்ணெயை மண்ணில் ஊற்றினால் தப்பு!
- தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்

பேப்பர் பறக்காம இருக்கறதுக்கு பேப்பர் வெயிட் வைக்கலாம். ஆனா, விமானம் பறக்காம இருக்கறதுக்கு ‘விமான வெயிட்’ வைக்க முடியாது!
- லைஃப்ல உயர ரைட் சகோதரர்கள் மாதிரி திங்க் பண்ணுவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.