தத்துவம் மச்சி தத்துவம்





கத்தி வெட்டுன்னா ரத்தம் வரும்; அருவா வெட்டுன்னா ரத்தம் வரும்; மின்வெட்டுன்னா ரத்தம் வருமா?
- பவர்கட்டில் பயங்கர டெர்ரர் ஆகி தத்துவம் சொல்வோர் சங்கம்
- அனுபவ், சேலம்.

‘‘நீங்க திடீர்னு பெண் பார்க்க வந்ததுனால, டிபன் எதுவும் செய்ய முடியலை...’’
‘‘பரவாயில்லைங்க... ஹோட்டல்லே இருந்து பார்சல் வரவழைக்கற வரைக்கும் வெயிட் பண்றோம்!’’
- குரு.சுப்ரமணியன், சென்னை-35.

‘‘கபாலி, ஏன் எப்பவும் ஒரே வீட்ல திருடறே..?’’
‘‘திருடுபவனுக்கே வீடு சொந்தம்னு ஒரு நாள் சட்டம் வராமலா போயிடும் எசமான்..?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை.

தூண்டில் போட்டு மீனைப் பிடிக்கலாம்; ஆனால் கேன்டிலைப் போட்டு மீனைப் பிடிக்க முடியாது..!
- மீன் கிடைக்காத ஏமாற்றத்தில் தத்துவம் சொல்வோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘வெற்றிக்கனி பறிக்கச் சொன்னதை தொண்டர்கள் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களா... எப்படி?’’
‘‘தோப்புல மாங்காய் திருடப் போய் மாட்டிக்கிட்டாங்க தலைவரே..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘தலைவருக்கு தன்னோட கேஸ்ல தானே வாதாடணும்னு ஆசை இருக்கும் போல...’’
‘‘அதுக்காக ‘ஐ.பி.எல்’க்கு படிக்கப் போறேன்னு சொல்றது கொஞ்சமும் நல்லா இல்லே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் முட்டை விலை ஏறினாலும், முழு முட்டையை உடைச்சித்தான் ஆஃப்பாயில் போடுவாங்க; பாதி முட்டையை வைச்சு போட மாட்டாங்க!
- அரைவேக்காடுத்தனமாக தத்துவங்கள் சொல்வோர் சங்கம்
- ஆர்.பி.சுந்தரி, பூனாம்பாளையம்.