கல்லீரல் பலமானால் குழந்தை பிறக்கும்!





மதுவிலக்குக் கோரிக்கைகள் இன்று பரவலாக எழத் தொடங்கியிருக்கின்றன. குடிப்போரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் கொடுமைகளும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதுதான் இதற்குக் காரணம். உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் ‘உடலின் வேதிப்பொருள் தொழிலகம்’ என அழைக்கப்படுகிற கல்லீரல், உடலில் சுமார் ஐந்நூறு விதமான வேலைகளைச் செய்கிறது. அப்படிப்பட்ட கல்லீரலைத்தான் ஆல்கஹாலால் ஸ்தம்பிக்கச் செய்கின்றனர் குடிமகன்கள். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என ஏன் சொல்கிறார்கள் புரிகிறதா? கல்லீரல் குறித்தும் அதைக் காப்பது பற்றியும் இந்த வாரம்...

அக்கு சித்தாந்தப்படி கல்லீரலின் சக்தியானது கண்களில் முடிவடைகிறது. அதனால்தான் கல்லீரல் பாதிப்பான மஞ்சள் காமாலையை கண்ணைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. பித்தநீர்ச் சுரப்பைத் தூண்டும் கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாகஅளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.



சரி, அக்கு பிரஷர்படி கல்லீரல் பாதிப்பை எப்படி அறியலாம் என்று பார்க்கலாமா?
கல்லீரல் மற்றும் பித்தப்பையின் சக்தி கேந்திரமானது வலது உள்ளங்கையின் இதய ரேகை முடியும் இடத்தில் உள்ளது. அங்கு அழுத்துகிறபோது வலி இருந்தால், ஈரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அக்கு பிரஷரில் நோயைக் கண்டுபிடிக்கும் முறையும் சிகிச்சையும் ஒன்றே என்பது தான் உங்களுக்குத் தெரியுமே! எனவே இந்த இடத்தில் தொடர்ச்சியாகத் தரும் அழுத்தமே, கல்லீரலைக் காப்பதற்கான ட்ரீட்மென்ட்டும்கூட.

இந்த சிகிச்சை தாம்பத்ய வாழ்க்கை சீராக நடைபெறுவதிலும் உதவுகிறது என்பது கூடுதல் விசேஷம். காரணம், கல்லீரலின் சக்தி ஓட்டமானது விதைப்பை, சினைப்பை வழியே நடப்பதால், கல்லீரலில் ஏற்படும் எந்த பாதிப்பும் அவற்றையும் பாதிக்கும். இதனால், விந்து எண்ணிக்கை குறைவு, சினைப்பை பாதிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். கல்லீரலை பலப்படுத்தும்போது இந்த உறுப்புகளும் பலப்பட்டு, தாம்பத்ய வாழ்க்கை இனிக்கிறது; கருத்தரிக்கும் வாய்ப்பும் கூடுகிறது.

கல்லீரல் சம்பந்தப்பட்ட மற்றொரு பிரச்னை, பித்தப்பை கல். தவறான உணவுப்பழக்கத்தால் பித்தநீர் கெட்டிப்பட்டு பித்தப்பையில் சேர்ந்து விடுவதைத்தான் ‘பித்தப்பை கல்’ என்கிறோம். தலை, கண், மற்றும் உடலின் அனைத்து தசைப்பகுதிகளுக்கும் சக்தி அளிக்கிறது இந்த பித்தப்பை. அதில் கற்கள் சேர்ந்தால் இன்று சர்வசாதாரணமாக பித்தப்பையையே அகற்றச் சொல்கிறார்கள். ‘மூளையின் மூன்றில் இரு பங்கை பாதுகாக்கிற பெட்டகம் அது’ என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவசரப்பட்டு பித்தப்பையை அகற்றினால் மனச்சோர்வு, தூக்கமின்மை, செரிமான மின்மை, உடல் வியர்த்தல், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள்தான் மிஞ்சும். பையில் இருக்கிற கல்லை எடுப்பதற்குப் பதில், பையையே பதம் பார்ப்பது என்ன வகை நிவாரணமோ?

சாப்பாடு முடிந்த வேளைகளில் இடது வயிற்றில் தொடர்ச்சியான வலி, வாய்க் கசப்பு, நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகளே பித்தப்பையில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள். அக்கு பிரஷரில் கல்லீரல் பாதிப்பை உணரும் அதே உள்ளங்கைப் பகுதி; மற்றும் முழங்கால் எலும்பின் தலைப் பகுதியில் இந்தப் பிரச்னையைச் சரி செய்யும் அக்கு புள்ளிகள் உள்ளன. தினசரி அவற்றை அழுத்த வேண்டியதுதான் ஆரம்ப கட்ட சிகிச்சை. அழுத்தம் ஆரம்பித்த அடுத்த சில நாளிலேயே உள்ளுக்குள் கற்களின் சுற்றளவு குறையத் தொடங்கி விடும். மேலும் வாய்க்கசப்பும் குறையும். அதை வைத்தே சிகிச்சை வேலை செய்யத் தொடங்கிவிட்டதை உணர்ந்து கொள்ளலாம்.



ஒரு வாரம் சென்ற நிலையில், கல்லை எடுக்கும் ஃபைனல் ஆபரேஷன். கத்தியும் ரத்தமும் இல்லாத ஆபரேஷன். அரை லிட்டர் ஆலிவ் ஆயிலும் அரை லிட்டர் எலுமிச்சை சாறும் கலந்து ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் கால் டம்ளர் வீதம் அதைக் குடிக்க வேண்டும். மதிய, இரவு உணவாக வாழைப்பழம், பொரி, சாஸ் இல்லாத பிரெட் எடுத்துக் கொள்ளலாம். வாந்தி வருவதுபோல் இருந்தால் பைனாப்பிள் ஜூஸைத் தேனுடன் கலந்து குடிக்கலாம். இரவில் வலப்பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவுதான் சிகிச்சை. மறுநாள் காலையில் கற்கள் வெளியே வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
(தொடர்வோம்)
தொகுப்பு: அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன்