கவிதைக்காரர்கள்





உப்புப் பெறாத
உப்புக் கல்லில்
புள்ளியாய் தொடங்குகிறது
உன் மீதான கோபம்...

உப்பு போல கரைந்து
குருதியெங்கும் கலந்து
பரவுகிறது அது
வேகமாக...

தவறு செய்துவிட்டதாய்
பனிக்கும் உன் கண்களில்
என் பார்வையைப் பதிக்காமல்
வெப்பம் மிகுந்த வார்த்தைகளை
உமிழ்கின்றன
என் உதடுகள்...

மன்னிப்பு கோரும்
உன் எந்தச் சொல்லையும்
ஏற்றுக்கொள்ளாமல்
கோபத்தோடு கை கழுவிய பின்
தொடர்கிறது என்
அன்றைய பயணம்...

பொழுது மயங்கும் வேளையில்
உன்னை சமாதானம் செய்ய
நானும்
என்னை சமாதானம் செய்ய
நீயும்
செய்யும் முயற்சிகளில்
சங்கமமாகிறது
நம் காதல்.