குட்டிச்சுவர் சிந்தனைகள்




தாலி சென்டிமென்டை மறந்துட்டீங்களே மச்சான்ஸ்!

அன்னைக்குப் பல பெண்களுக்குத் தாலியக் கழட்டுனா மனசு உறுத்தும்.
இன்னைக்குப் பல பெண்கள், தூங்கறப்ப உறுத்துச்சுன்னா தாலியக் கழட்டி வச்சிடுறாங்க.

அப்ப எங்கேயாவது ரோட்டுல ஆக்சிடென்ட்டை பார்த்தா, உடனே ஆம்புலன்சுக்கு போன் போட்டான்.
இப்ப எங்கேயாவது ரோட்டுல ஆக்சிடென்ட்டை பார்த்தா, உடனே போட்டோ புடிச்சு திணீநீமீதீஷீஷீளீல   போடுறான்.

அன்றைய தமிழர்கள், வீட்டுல இருக்கிற தங்கள் அப்பா, அம்மாவுக்கு தெரியாம காதலிச்சாங்க.
இன்றைய தமிழர்கள், வீட்டுல இருக்கிற தங்கள் புருஷன் / பொண்டாட்டிக்கு தெரியாம காதலிக்கிறாங்க.

புத்தாண்டு, பொங்கல்னு பண்டிகை வந்தா, வாழ்த்து அட்டை வாங்கி சொந்த பந்தங்களுக்கு அனுப்புவான்.
இன்னைக்கு பண்டிகை நாள்ல எஸ்.எம்.எஸ் அனுப்பினா காசு புடிப்பாங்கன்னு, முந்தின நாளே   ‘Happy Diwali’ சொல்லி முடிச்சிடறான்.

அன்னைக்கு மந்தையில பாடிக்கிட்டும், ஆடிக்கிட்டும் விளையாண்ட குழந்தைகளை மிரட்டி ஸ்கூலுக்கு அனுப்பினான்.
இன்னைக்கு ஒழுங்கா ஸ்கூலுக்குப் போற குழந்தைகள துன்புறுத்தி, டி.வி ஸ்டேஷன்ல ஆடவும் பாடவும் அனுப்பறான்.



ஒரு பண்டிகைய எப்படி கொண்டாடணும்னு தமிழனே முடிவு செஞ்சான்.
இப்ப ஒரு பண்டிகைய எப்படி கொண்டாடணும்னு, தமிழ்த் தொலைக்காட்சிகள் முடிவு செய்யுது.

அப்பவெல்லாம் வீட்டு ஹால்ல போன் அடிச்சா, ‘நீ எடுக்கிறியா... நான் எடுக்கட்டா...’ன்னு மொத்த வீடே ஒரு இடத்துல கூடும்.
இப்பவெல்லாம் போன் கால் வந்தா, மொபைல தூக்கிக்கிட்டு எல்லோரும் தனிமையான இடத்துக்குப் போயிடறாங்க.

அன்னைக்கு ஊருக்குள்ள ஒரு காரு வந்தா, நாய்கள் எல்லாம் காரத் துரத்தி ஊரச் சுத்தி வரும்.
இன்னைக்கு காருக்குள்ளேயே நாய் வச்சுக்கிட்டு ஊரச் சுத்தி வர்றான் தமிழன்.

அன்றைய தமிழர்கள் ரோட்டுல சைக்கிள் ஓட்டுனாங்க.
இன்றைய தமிழர்கள் உடம்பு இளைக்க வீட்டுக்குள்ளேயே சைக்கிள் ஓட்டுறாங்க.

அன்றைய தமிழன் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்தான்.
இன்றைய தமிழன் சந்தோஷமா இருந்துட்டு அப்புறம் கல்யாணம்
பண்ணிக்கிறான்.

அப்போதைய தமிழர்களுக்கு   ஷிtணீtமீs  என்றால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா.
இன்றைக்கு தமிழர்களுக்கு ஷிtணீtமீsன்னா, ஒன்லி
அமெரிக்கா.

அந்தக் காலத்துல பெரியவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்றதே எதிர்த்துப் பேசுற மாதிரி!
இந்தக் காலத்துல கேட்ட கேள்விக்கு எதிர்த்து பேசறதுதான் பதிலே!

அன்னைக்கு மகாபலி புரம்னு சொன்னாலே தமிழனுக்கு நினைவுக்கு வந்தது சிலைகள்.
இன்னைக்கு மகாப்ஸ்னா வெறும் ரிஸார்ட் அறைகள்.

அன்றைய தமிழன், தான் காதலிக்கும் பொண்ணுகிட்ட கூட காதலைச் சொல்ல பயந்தான்.
இன்றைய தமிழன், கல்யாணமான பொண்ணா இருந்தாக்கூட காதலை கவலையில்லாம சொல்லிடுறான்.

அப்பவெல்லாம் தமிழன் தன்னை பெத்தவங்களிடம் பயப்பட்டான்.
இப்போவெல்லாம் தமிழன் தான் பெத்ததுகளிடம் பயப்படுறான்.

அன்னைக்கு தூங்குற நேரத்துல மட்டும் கொசுவலை நெட்டுக்குள் இருந்தான்.
இன்னைக்கு முழிச்சிருக்கிற நேரத்துல எல்லாம் இன்டர்நெட்டுக்குள்ள இருக்கான்.

அன்னைக்கு வெத்தலை மெல்லுற பாட்டிங்கதான் ஸ்லீவ்லெஸ்ல இருப்பாங்க.
இப்ப பப்பிள்கம் மெல்லுற பேத்திங்கதான் ஸ்லீவ்லெஸ்.

அந்தக் கால எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் ஹீரோ போலீஸாவும், வில்லன் ரவுடி, திருடனாவும் இருப்பாங்க.
அஜித், விஜய் படங்களில் ஹீரோ ரவுடி, திருடனாகவும்... வில்லன் போலீஸ், அரசியல்வாதியாவும் இருக்காங்க.

அன்றைய தமிழக இல்லங்களில் முதியோர்கள் அதிகம்.
இன்றைய தமிழகத்தில் முதியோர் இல்லங்கள் அதிகம்.

அப்போ முக்கால்வாசி தமிழர்களுக்கு Love at  First Night.
  இப்போ முக்கால்வாசி தமிழர்களுக்கு Love at First Sight.

அப்போ ஜீன்ஸ் பேன்ட் வாங்கினா, போட்டுக் கிழிச்சாங்க.
இப்போ கிழிஞ்ச ஜீன்ஸ் பேன்டைத்தான் வாங்கிப் போடுறாங்க.

அப்ப ஒரு மனுஷன் பேசுறத இன்னொரு மனுஷன் கேப்பான்.
இப்ப டி.வி பேசுறத எல்லா மனுஷனும்
கேட்கிறான்.

அன்றைய தமிழ்நாட்டு சாமியார்கள் சிரமத்தில் இருந்தார்கள்.
இன்றைய சாமியார்கள் 300 ஏக்கர் ஆசிரமத்தில் இருக்கிறார்கள்.

எப்பவாவது தியேட்டர் ஸ்கிரீன் முன்னும், வெள்ளிக்கிழமைகளில் டி.வி ஸ்கிரீன் முன்னும் உட்கார்ந்திருந்தான் தமிழன்.
இப்போ எப்பவுமே மொபைல் ஸ்கிரீன் முன்னும் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் முன்னும் உட்கார்ந்திருக்கிறான்.

அப்ப ஒரு பொண்ணு தன்னை காதலிக்கிறாள்னு தெரிஞ்சா ட்ரீட் வச்சாங்க.
இப்ப ஒரு பொண்ணு யாரையும் கரன்ட்ல காதலிக்கலைன்னு தெரிஞ்சாவே ட்ரீட் வைக்கிறாங்க.

அன்றைய தமிழன் கடன்காரனிடம் இருந்து தப்பிக்க வீட்டை மாற்றினான்.
இன்றைய தமிழன் கடன்காரனிடம் இருந்து தப்பிக்க சிம் கார்டை மாத்துறான்.

அன்றைய பள்ளிக்கூடத்தில்   கிஙிசிஞியே ஆறாம் வகுப்புல சொல்லிக் கொடுத்தாங்க.
இன்னைக்கு பள்ளிக்கூடத்துல +2 சிலபஸ், +1லயே சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க.

அப்போ
தமிழ்நாட்டுக்குள்ளேயே எப்பவாவதுதான் டப்பிங் படம் வரும்.
இப்போ தினமும் வீட்டுக்குள்ளேயே டப்பிங் சீரியல் வருது.

அன்னைக்கு டாக்டர்கிட்ட போனா, எல்லாத்தையும் செக் பண்ணிட்டு, ஸ்கேன் எடுக்க சொல்வாரு.
இன்னைக்கு டாக்டர்கிட்ட போனா, நாம ஸ்கேன் லெவலுக்கு தாங்குவமான்னுதான் செக் பண்றாரு.

அன்றைய தமிழ்நாட்டு காதல்களில் ணீயீயீமீநீtவீஷீஸீ அதிகம்.
இன்றைய தமிழ்நாட்டு காதல்களில் அபார்ஷன் அதிகம்.

அன்னைக்கு பொண்ணுங்க வீட்ல வேலை செஞ்சாங்க.
இன்னைக்கு பொண்ணுங்களும் வீட்டு வேலை செய்யறாங்க.

அப்போ, தமிழன் ‘நீ மேலத்தெரு பரமன் மகன்தானே?’, ‘நீ கீழத்தெரு கிருஷ்ணன் மகன்தானே!’ என அடையாளம் காணப்பட்டான்.
இப்போ, ‘நீங்க சி2ணி ப்ளாட்தானே? நீங்க ஞி4சி ப்ளாட்தானே?’ன்னு அடையாளம் காணப்படுறான்.

அப்போ தமிழக வீடுகளில் பால் குக்கர்கள் விசில் அடித்தன.
இப்போ தமிழக வீடுகளில் சார்ஜ் பத்தாமல் UPSகள் விசிலடிக்கின்றன.

அன்னைக்கு எதாவது சங்கம்னா எல்லா ஜாதிக்காரங்களும் இருந்தாங்க.
இன்னைக்கு ஜாதிக்காரங்க எல்லாம் சேர்ந்துதான் சங்கமே ஆரம்பிக்கிறாங்க.

அப்போ அன்பை கொட்டும் மனிதர்கள் நிறைய இருந்தாங்க.
இப்போ மனிதர்களா இருக்கவங்க மட்டுமே அன்பைக் காட்டுறாங்க.

அன்றைய தமிழன் செலவு செய்ய யோசிச்சான்.
இன்றைய தமிழன் செலவு செய்த பிறகு யோசிக்கிறான்.

அப்போ குடிச்சவன்ல பாதி பேரு படிச்சவன் கிடையாது.
இப்போ குடிக்கிறவனுக்கு ஊத்திக் கொடுப்பதே படிச்சவன்தான்.

முன்பு தமிழன் எப்போதாவது
பொய் பேசுவான்.
இப்போ தமிழன் எப்பவாவது பொய் இல்லாமல் பேசுறான்.