தத்துவம் மச்சி தத்துவம்



‘‘தலைவர் நம்ம கட்சி அலுவலகத்துல இருக்கற காலிங் பெல்லை கழட்டிட்டாரே... ஏன்?’’

‘‘கூட்டணிக்காக யாராவது வந்து கதவைத் தட்டட்டும்னு தான்..!’’

- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

போலீஸ் என்னதான் ஒருத்தர் பேர்ல வழக்கை எவ்வளவு அழகா ஜோடிச்சாலும், அதையெல்லாம் ஃபேஷன் டிசைனிங்ல சேர்க்க
முடியாது! - போலீஸ் டிரஸ்ஸை மாற்ற ஆசைப்படும் ஃபேஷன் டிசைனர் சங்கம்

பெ.பாண்டியன்,
காரைக்குடி.

‘‘நம்ம தலைவர் சினிமாவுல இருந்து வந்தவர்ங்கிறதை நிரூபிச்சிட்டார்னு எப்படிச் சொல்ற..?’’
‘‘புதுசா கட்சி மாறி வந்தவருக்கு கேரவன் தந்திருக்காராம்!’’

- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் கையில பால் புட்டியோட வந்து நிக்கறாரே... என்ன நடந்துச்சாம்?’’
‘‘தாய்க்கட்சியில இருந்து அவரைத் தூக்கி வீசிட்டாங்களாம்!’’

- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவர் ஒரு மாதிரியாத்தான் பேசறார்...’’
‘‘அப்படி என்ன பேசினார்?’’
‘‘கட்சிக்காரங்க எல்லாம் எதிர்க்கட்சிக்குப் போய்க்கிட்டு இருக்காங்களே... கட்சி பிழைக்குமான்னு கேட்டதுக்கு, ‘எதையும் 48 மணி நேரம் போனால்தான் சொல்ல முடியும்’னு கையை விரிக்கிறாரே!’’

- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘தலைவர் வெளிநடப்பு பண்ணினதுக்காகவா அவரைக் கைது செய்தாங்க..?’’
‘‘ஆமா. அவர் வெளிநடப்பு பண்ணினது ஜெயில்ல இருந்தாம்..!’’ 

- பெ.பாண்டியன், காரைக்குடி.



கடல் பக்கத்துல லைட் ஹவுஸ் கட்ட முடியும்; ஆனா லைட் ஹவுஸ் பக்கத்துல கடலை வைக்க முடியுமா?
- கெஸ்ட் ஹவுஸில் ரெஸ்ட் எடுப்போர் சங்கம்

- டி.எஸ்.ரேவதி,
தஞ்சாவூர்.