ஜோக்ஸ்



‘‘நம்ம தலைவரை மீட் பண்ணிட்டு ஜோசியர் ஏன் கடுப்பா போறார்..?’’
‘‘புது வருஷத்துல ஜாமீன் வாங்க சிறந்த நாட்கள்.... வெளிநடப்பு செய்ய தகுந்த நாட்கள்... ஊழல் செய்ய உகந்த நாட்கள்... உண்ணாவிரதம் இருக்க ராசியான நாட்கள் இதையெல்லாம் குறிச்சுத் தரச் சொன்னாராம்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘எதுக்குத்தான் விழா எடுக்கறதுன்னு இந்தக் கட்சிக்காரங்களுக்கு விவஸ்தையே இல்லை...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘புதிய ஊழல் ஒன்றுக்கு துவக்க விழாவாம்..!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘கூட்டத்துல நிறைய பேரு பாதியில எழுந்து போறாங்களே... யாருய்யா அவங்கல்லாம்?’’
‘‘நம்ம கட்சியோட பார்ட் டைம் தொண்டர்கள், தலைவரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘நர்ஸ்! ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே என்ன கூட்டம்..?’’
‘‘பேஷன்ட் பிழைப்பாரா, இல்லையான்னு சூதாட்டம் நடக்குது டாக்டர்..!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘தலைவர் வீட்ல இருந்து கட்சி ஆபீஸ் எவ்வளவு தூரம்..?’’
‘‘அதிகமில்ல... கோர்ட்ல இருந்து ஜெயிலுக்குப் போகிற தூரம்தான்..!’’
- லெ.நா.சிவகுமார், சென்னை-33.

‘‘என்னது... அந்த நடிகை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ஐம்பது லட்ச ரூபாய் கேக்கறாங்க..?’’
‘‘ஒரே பாட்டுல பணக்காரர் ஆகணுமாம்...’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட ‘டயட் கன்ட்ரோல் இருக்கப் போறேன்’னு புரியாத மாதிரியே சொல்றாரே..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.