facebook வலைப்பேச்சு



இப்படித்தானிருந்தான் அவன் அப்போதும்... நீங்கள் வேறாகபார்த்திருந்தீர்கள் அவ்வளவே.

- ஜோ ஃபெலிக்ஸ்

சில வருடங்களுக்கு முன் உருகி உருகிக் காதலித்த பிரபல நடிகை களை திடீரென தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பார்க்க நேரிடும் இந்த வாழ்க்கை, பெரும் சாபங்கள் நிரம்பியது.
 வசந்தன் ஆம்

முட்டாள்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள். அவர்களுக்குத் தேவை பதிலல்ல.
நீங்கள் வாய்திறக்க வேண்டும். அவர்கள் கூடாரத்திற்கு ஆள் சேர்க்க வேண்டும்... அவ்வளவே!
- முத்துராம்

சாதி செழித்திடும் மனசெல்லாம் தரிசெனத் திரிந்திட வேண்டுமடா!
பின் ஒரு புது மழையில் அதில் பல பூச்செடி பூத்திட வேண்டுமடா!
- பிஜி சரவணன்

மிகவும் போதை தரும் ஒரு வார்த்தை மனைவி அழைக்கும் ‘‘என்னங்க’’... ஆபத்துக்குள் இழுப்பதும் அதே வார்த்தைதான்!
- குருசாமி கணபதி

ஆம் ஆத்மி... சின்னதா ஏதோ ஒண்ணு முளைத்திருக்கு..! அது என்னவோ, ஏதோ என்று ரொம்பவும் ஆராய்ந்து... விமர்சித்து... கிள்ளிப் போட்றாதீங்க!
- அமல்ராஜ்
ஒரு தந்தையின் டைரி...
என் மகன் எனக்குச் சொந்தம், அவன் மனைவி வரும் வரை.
என் மகள் எனக்குச் சொந்தம், என் உயிர் இருக்கும் வரை!!
- உச்சிகுடுமி

‘இண்டியா கேட் வழியாகத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழையறாங்கன்னு யாரோ தப்பா நியூஸ் கொடுத்ததாலதான் டெல்லி எலெக்ஷன்ல நின்னோம்!’ 
# இப்படிச் சொல்லிருங்க கேப்டன்...
- சுந்தரம் சின்னுச்சாமி

சிறிதுநேரம்கூட பெய்வதில்லை, அறிவிக்கப்படுகிற ‘கனமழை’!
- பாலபாரதி எம் எல் ஏ

நேசம் என்பது ஒயின் மாதிரி. வயது ஏற ஏறத்தான் அதன் மதிப்பு கூடிக்கொண்டே போகும்.
- அன்புசிவன்

சென்னையில் ஒரே தெருவில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில், ஆண் பைக்கில் உட்கார்ந்து கொண்டும், பெண் நின்றுகொண்டு பைக்கின் ஹேண்டில்பாரை பிடித்தபடியும் பேசிக்கொண்டிருந்தால், அந்தத் தெருவில் பெண்கள் விடுதி இருக்கின்றது என்று அர்த்தம்!
- ஜாக்கி சேகர்

யாருமற்ற அறைக் கதவைத் தட்டினேன்... ஒலியே பதிலாயிருந்தது.
- ஐயப்ப மாதவன்

சாத்திய சன்னலையும்
நனைத்துச் செல்லும்
சாரலைப் போன்றதொரு
பாரபட்சமற்ற பாராட்டுதல்
போதும்தான் வாழ்வை
ஈரப்படுத்திக் கொள்வதற்கு...
- தீபா சாரதி

மேலும் 5 கிரகங்களில் ‘வாட்டர்’ கிடைக்க வாய்ப்பிருக்கிறது - நாசா அறிக்கை
நம்மூரு பய எவனோ போய் அங்கேயும் வீசியெறிஞ்சுட்டு வந்திருக்கான் ‘அம்மா மினரல் வாட்டர்’ பாட்டிலை!
- மாயவரத்தான்
கி ரமேஷ்குமார்