ஜோக்ஸ்



என்னங்க இது... வீட்டைச் சுத்தி டாஸ்மாக் கடையா இருக்கு..?’’
‘‘நீங்கதானே தண்ணி வசதி இருக்கிற ஏரியாவுல வீடு வேணும்னு கேட்டீங்க..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘ஓட்டுக்கு பணம் வாங்கி நம்ம தொகுதிக்காரங்க சுகம் கண்டுட்டாங்க...’’
‘‘எதை வச்சு அப்படிச் சொல்றே?’’
‘‘சட்டசபைத் தேர்தலுக்கு ஓட்டுப் போட அட்வான்சா பணம் கிடைக்குமான்னு நம்ம தலைவர் கிட்ட கேட்டிருக்காங்க!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘ஊசி போடும்போது நர்ஸை ஏன்யா பார்க்கறே..?’’
‘‘வலி தெரியாம இருக்கத்தான் டாக்டர்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

என்னதான் சூப்பரோ சூப்பரா இருந்தாலும், ‘லெட்டர் பேடை’ யாரும் லெட்டர் ‘குட்’னு சொல்ல மாட்டாங்க...
- குட் தத்துவங்களை பெட்டில் படுத்தபடி சிந்திப்போர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

இந்த போலீஸ் ஸ்டேஷன்ல கிரிமினல்கள் எல்லாம் சந்தோஷமா திரியறாங்களே... ஏன்?’’
‘‘இந்த ஸ்டேஷன்ல கம்ப்யூட்டர் முறைல லாடம் கட்டுவாங்களாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘இந்த மாத்திரையை தினமும் மூணு டோஸ் குடுக்கச் சொல்லி உங்க மனைவி கிட்ட சொல்லியிருக்கேன்...’’
‘‘மாத்திரையை நர்ஸ் குடுக்கட்டும். என் மனைவி டோஸ் மட்டும்தான் குடுப்பா டாக்டர்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘என்ன இது... உங்க படத்துல சம்பந்தமே இல்லாம கத்திரிக்கோலை காட்டறீங்க?’’
‘‘நான்தான் சொன்னேனே... சென்சார் என் படத்துல ரெண்டு மூணு இடத்துல கத்திரிக்கோலை வச்சுருச்சுன்னு!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.