குட்டிச் சுவர் சிந்தனைகள்



இந்த வருஷ ஐ.பி.எல் பாதி முடிஞ்சாச்சு, மீதியும் முடியறப்ப எந்தெந்த டீம் எப்படி இருக்கும்னு ஐடியாவும் கிடைச்சாச்சு. ஒவ்வொரு டீமோட நிலைமையையும் பார்த்து பாட்டு டெடிகேட் பண்றோம்...

சென்னை சூப்பர் கிங்ஸ்: ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை... நாங்கதான்டா ஐபிஎல் ராஜா, தூக்குங்கடா வெள்ளில கூஜா... வருஷா வருஷம் ஃபைனல் போவோம், வந்து விசில போட்டுக்கடா’ பாடலை சென்னை அணிக்கு டெடிகேட் செய்யறோம்.

மும்பை இந்தியன்ஸ்: ‘பாட்சா பாரு, பாட்சா பாரு, தொடை நடுங்கும் பாட்சா பாரு... பத்து டீமு சேர்த்து அடிச்சும் பால் வடியும் முகத்த பாரு... இவனுங்க பேருக்குள்ள இண்டியன்ஸ் இருக்கு உத்து பாருடா, ஆனா பாயிண்ட்ஸுக்கு நொண்டி அடிப்பானுங்க வெத்து பீசுடா’ பாடலை மும்பை அணிக்கு டெடிகேட் செய்யறோம்.கிங்க்ஸ் 11 பஞ்சாப்: ‘அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே... மேக்ஸ்வெல்தான் அடி பிச்சான் பிச்சான் பிச்சானே... பில்லா ரங்கா பாட்சாதான், இவனுங்க பேட் பேசுது பேஷாதான்’ பாடலை பஞ்சாப் அணிக்கு டெடிகேட் செய்யறோம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ‘பிட்ச தெரிஞ்சிக்கிட்டாங்க, பிச்சு உதறிட்டாங்க கண்மணி என் கண்மணி... நாளும் ஓடிடுச்சு பாலும் தேய்ஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி... நேத்து நாங்க மன்னர், இப்போ ஆகமாட்டோம் வின்னர்’ பாடலை கொல்கத்தா அணிக்கு டெடிகேட் செய்கிறோம்.ராஜஸ்தான் ராயல்ஸ்: ‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்... வாட்சனும் ஸ்மித்தும்தான் செமிய காட்டுவான்... ஓ ஷில்பா கலங்காதே... டிராவிட் இல்லாட்டி விளங்காதே’ பாடலை ராஜஸ்தான் அணிக்கு டெடிகேட் செய்யறோம்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: ‘வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம், கோப்பை வெல்வதே, நாங்கள் கொண்ட லட்சியம், சென்னையை பைனலில் சென்று பார்ப்போம், அசந்தால் மேட்ச்சை நாங்கள் ஜெயிப்போம்’ பாடலை கறுப்புக் குதிரை ஹைதராபாத் அணிக்கு டெடிகேட் செய்யறோம். டெல்லி டேர் டெவில்ஸ்: ‘ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஜெயிக்க... ஒரு பேட்ஸ்மேனும் இல்லை அடிக்க... ஒரு winனும் இல்லை, ஒரு run

னும் இல்லை’ பாடலை டெல்லி அணிக்கு டெடிகேட் செய்யறோம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ‘விடுகதையா இந்த டோர்னமென்ட்... சம்பளம் ஆகுமா செட்டில்மென்ட்... அடிக்க முடியாத கிறிஸ் கெயிலும், ஆல் அவுட் ஆகும் டீம் ரயிலும், ஏன் என்று கேட்க நாதியில்லை, யுவராஜ், கோஹ்லி இருந்தும் நீதியில்லை’ பாடலை பெங்களூர் அணிக்கு டெடிகேட் செய்யறோம்.

கடைசி ஓவர் வந்துட்டாலே வின்னிங் ரன்னடிக்க வந்திடும் தல தோனி மாதிரி, தேர்தல் முடிஞ்சுட்டாலே இந்த வட இந்திய மீடியா தேங்கா தலையனுங்க தேர்தல் கருத்துக் கணிப்பை தோண்டி எடுத்துக்கிட்டு வந்திடுறாங்க. அடேய், நாங்க எல்லாம் ஓட்டுப் போட்ட கையோட ஸ்டாக் வாங்கி வச்ச சரக்குக்கு சியர்ஸ் சொல்லப் போயிட்டோம்... நாங்க எப்ப உங்க ‘EXIT POLL’க்கு கருத்து சொன்னோம்?

அய்யா, அய்யய்யா! ஆல் உலகத்துலையே  நம்பகமானது ஒரு சில EXIT POLLகள்தான். மூணு ரூபா மொய் வச்சுட்டு மொத பந்தில சாப்பிட்டுட்டு, சாம்பாருல உப்பு இல்லன்னு சமையல்காரர   துப்பிட்டுப் போறான் பாத்தியா... அவன்   சொல்றதுதான்டா கரெக்டான கருத்துக் கணிப்பு... முப்பது ரூபா டி.வி.டியில படம் பார்க்காம, முன்னூறு ரூபா செலவு பண்ணி தியேட்டர்ல போயி படத்தப் பார்த்துட்டு, வெளிய வர்றப்ப மொத்தப் படமும் மொக்கையா சக்கையான்னு மூஞ்சிலயே காமிச்சுட்டுப் போறாங்க பாருங்க... அதுதான் சரியான EXIT POLL. ஒவ்வொரு நாளும் ஸ்கூல் விட்டு வரும்போது, ‘மூளையைக் கசக்கி படிக்க வைக்காம மூளையை நசுக்கி படிக்க வச்சாங்க’ன்னு களைப்பான பாடி லாங்குவேஜ்லயே காட்டுறாங்க பாருங்க குழந்தைங்க... அதுதான் தெளிவான ணிஙீமிஜி றிளிலிலி.

இதையெல்லாம் கண்டுக்காம, கருத்தே கேக்காம, எவனும் கருத்தே சொல்லாம, நீங்களா உங்களுக்கு நண்பர்களான கட்சிகளுக்கு நம்பர்களைப் போட்டு சொல்றதுக்குப் பேரு ணிஙீமிஜி றிளிலிலி இல்ல! இன்னொரு தடவ எக்ஸிட் போல், எருமை போல்னு கலர் கலர் கட்டமும் பலப்பல நம்பருமா வந்தீங்க... உங்க வாய திறக்க விட்டு, வாஷ் பண்ண ‘ஹார்பிக் அண்ணன்’ அப்பாஸை வரச் சொல்லிடுவேன்.

பொண்ணுங்கன்னா என்னைக்காவது சாம்பாருல உப்பு போட மறக்கிறதும், ஆம்பளைங்கன்னா என்னைக்காவது ஜீன்ஸ் பேன்ட்ல ஜிப்பு போட மறக்கிறதும் சகஜம்தானேப்பா! என்னமோ நினைப்புல என்னைக்காவது ஜிப்பு போடாம வந்துட்டா ஏதோ நாட்டுக்கே துரோகம் செஞ்ச மாதிரி வித்தியாசமா பார்க்கறீங்க? இந்தியாவுல இருக்கிற ஒவ்வொரு ஆம்பளையும் வருஷம் நாலு தடவை பேன்ட்ல ஜிப்பு போட மறந்துட்டு வந்துடுறாங்கன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.

ஒருநாள் ஜிப்பு போடாம வந்துட்டா கூடி கும்மியடிக்கிறீங்களே... ஒரு நாள் மப்பு போட்டு வந்தா மட்டும் ஏன் எல்லோரும் தள்ளி தள்ளி ஓடுறீங்க? மக்கள் வர்ற இடத்துல குண்டு போடுறது, ஊழல்ல மக்கள் பணத்த ஆட்டைய போடுறது, காச வாங்கிட்டு ஓட்டு போடுறது, பக்கத்து வீட்டுல படிக்கிற பசங்க இருக்கிறப்ப ஃபுல் சவுண்டுல பாட்ட போடுறதுன்னு, நாட்டுல போடுறதுலனாலதான் பிரச்னையே தவிர, என்னைக்கும் ஜிப்ப போடாம வரதுனால பிரச்னை வந்ததே இல்ல!

ஆனா ஒண்ணு நிச்சயம், ஜிப்பு போடாம வந்துட்டீங்கன்னு சொல்லும் பெண்கள் சந்தோஷத்தையும், ஜிப்பு போடாம வந்துட்டீங்கன்னு சொல்ற ஆண்கள் சந்தேகத்தையும் தர்றாங்க என்பதுதான் உண்மை!

இந்த  வார  குட்டிச் செவுரு  போஸ்டர்  பாய்ஸ்...

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், கேரள அரசு கொண்டு வந்த அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியும் குடுவைக்குள்ள குண்டூசிய போட்டு குலுக்குற மாதிரி குதிக்கும் கேரள அரசியல்வாதிகள் சிலர்!

ஒரு குட்டி நீதிக்கதை

கார்கில் எல்லையோரம் இருக்கும் ஒரு பாகிஸ்தான் ராணுவ முகாம். ஜூனியர் ஆபீசர் ஜாகிர் கானும், கேப்டன் விஜயகாந்திடம் ‘வல்லரசு’, ‘வாஞ்சிநாதன்’ போன்ற படங்களில் பல தடவை அடி, உதை வாங்கிய வாசிம் கானும் பேசிக்கொள்கிறார்கள்.
‘‘அண்ணே, உங்களுக்கு சம்பளம் கிரெடிட் ஆயிடுச்சாண்ணே?’’
‘‘ஏன் தம்பி... உனக்கு ஆகலையா?’’

‘‘எனக்கு மட்டும் இல்லண்ணே, இன்னும் எங்க ரெஜிமென்ட் முழுக்க சம்பளம் வரலண்ணே!’’‘‘இதெல்லாம் ஒரு பிரச்னையா? நேரா இந்தியா பார்டர் போங்க... கம்பி வேலிக்கு 20 மீட்டர் முன்னாலயே நின்னுக்கிட்டு வானத்த பார்த்து 10 தடவ சுடுங்க. உடனே வட இந்திய மீடியாங்க எல்லாமே, ‘இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல். 200 கிலோ மீட்டர் ஊடுருவல்’னு மூணு நாள் முக்கும். இஸ்லாமாபாத்ல மிக்சர் தின்னுக்கிட்டே இதை டி.வில பார்க்கிற நம்ம ராணுவ அமைச்சகம், உங்க பட்டாலியன் பொறுப்பா வேலை செய்யுதுன்னு சம்பளத்த கிரெடிட் பண்ணிடுவாங்க.’’

‘‘அப்ப சம்பள உயர்வுக்கு என்னண்ணே செய்வீங்க?’’‘‘வேறென்ன, வானத்த பார்த்து சுடுறதுக்கு பதிலா, இந்தியாக்காரங்க விளக்கி கவுத்தி வச்சிருக்கிற ஏனத்த பார்த்து சுடுவோம்...’’
நீதி 1: பாகிஸ்தான்காரனுங்க கொட்டாவி விட்டா கூட நம்மள பயமுறுத்துவதே இந்த வட இந்திய மீடியாக்களுக்கு வேலையா போச்சு! நீதி 2: பாக். ராணுவ வீரர்கள் எல்லையில் வாலாட்டுவது நம்மள கொல்ல இல்ல, அவங்க குடும்பம் பிழைக்க!

சில விஷயங்கள் செஞ்சிருக்கலாம், சிலதை செய்ய நினைத்திருக்கலாம், சிலதை செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஆனாலும் இந்தியாவின் இன்றைய முன்னேற்றத்திற்கு நிச்சயம் மன்மோகன் சிங்கும் ஒரு காரணம். அரசியலிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு நிலைக்குச் சென்றுவிட்டாலும், என்றுமே மன்மோகன் சிங் இந்தியாவின் தலையெழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதியவர் என்பது மாறாது. மிக்க நன்றி மன்மோகன் ஜி!

ஆல்தோட்ட பூபதி