facebook வலைப்பேச்சுஉலகத்திலேயே விலையுயர்ந்த வைரம் ஸ்விட்சர்லாந்தில் ஏலம் விடப்படுகிறதாம்; டைம் இல்லேங்கறவங்க ஸ்விஸ் பேங்க் அக்கவுன்ட் நம்பரும், போக வர ஃப்ளைட் சார்ஜும் குடுத்தீங்கன்னா வைரத்தை ஏலத்தில எடுத்து வந்து குடுத்துடறேன்!
- கோவை பாலா எஸ்

மெடிக்கல் மிராக்கிள்கள் மட்டும் இல்லாவிட்டால் பாதி தமிழ்ப் படங்களுக்கு க்ளைமாக்ஸ் கிடையாது...
- அசோக் குமார்

ஒரு சிறந்த கவிதைக்கு வலியோ, காதலோ தேவையாய் இருக்கிறது...
- தமிழ் அரசி

மகாபாரதம் போலத்தான் வாழ்க்கை. எல்லோருமே ஆளுக்கொரு நியாயங்களுடன் / சபதங்களுடன் வாழ்கிறார்கள். ஏன்... சகுனிக்கு கூட ஒரு நியாயம் இருக்கும். பார்த்துக்கோங்க!
- வாசு முருகவேல்

உப்புமாவை ரைட் க்ளிக் பண்ணி டெலிட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்?
- சுந்தரம் சின்னுசாமி

உப்புமாவை ரைட் க்ளிக் பண்ணி டெலிட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்?
- சுந்தரம் சின்னுசாமி

வளர்ந்து ஆளான வேளையில் தனித்துப் போனது தாயும், தந்தையும் மட்டுமல்ல... கரடி பொம்மையும்!
- அன்பு சிவன்

காரணம்
இல்லாத
பிரிவுகள்
நறுமணம்
இல்லாத பூக்களுக்குச் சமம்...
# காகிதப்பூக்கள்
- திருவாரூர் மணி

தமிழகத்தில்தான்
ஏராளமான
ஐபேடுகளும்
ஹெலிபேடுகளும் உள்ளன..!
-வெங்கடேஷ் ஆறுமுகம்

ஜனநாயகக் கடமை என்பது நம் தோலை நாமே உரித்துக் கொள் வதுதான் போலும்!
# மை வச்ச இடத்தில் தோல் உரியுது மக்கா...
- பெ.கருணாகரன்

வன்மம் கையில்
வாள் கொடுத்தது
அன்பு அதை
பூங்கொத்தாக மாற்றியது
- ராஜா சந்திரசேகர்

காத்திருத்தல் என்பதை விலகுதல் என்று கொள்ளுதல் ஆகாது!
- இரா எட்வின்

வீதியோர ஓவியனின்
வயிற்றில்
பட்டினி ஓவியத்தை
வரைந்து செல்லும்
மழை...
நிராகரிப்பின் நதியில்
- கடங்கநேரி யான்

ஒவ்வொரு ஆம்புலன்ஸும் நம்மைக் கடந்து செல்லும்போது, ஏதோ ஒரு குடும்பத்தை இடியாகத் தாக்கக் கூடிய ஒரு சோகத்தைச் சுமந்தே செல்கிறது...
- சாரதி

குண்டா இருக்குறவன் எல்லாம் ஆரோக்கியமா இருப்பதாகவும், ஒல்லியா இருக்குறவனுக்கெல்லாம் ஏதாவது நோய் இருக்கும்னும் முடிவு கட்டிக் கொள்வது நாமதானுங்கோ!
- விஜய் சிவானந்தம்

பல வண்ண நினைவுகளை உள்ளடக்கியவை கறுப்பு
- வெள்ளை புகைப்
படங்கள்...
- பரிமேலழகன் பரி

twitter வலைப்பேச்சு
@Tamil_Typist   
நிலையான ஆட்சி வரும் என்ற கணிப்பில் பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டது: செய்தி
# 10 வருஷமா நிலையில்லாத ஆட்சியா இருந்தது? அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டம்!

@2nrc   
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், இனிமே மன்மோகன் சிங் பிரதமர் இல்லே...

 @writernaayon 
தப்பிப்
பிழைப்பதென
முடிவெடுத்து
விட்டேன்.
என் தவறுகளை எண்ணி
நேரத்தை
வீணடிக்காதீர்.

@iamvaalu   
கவுண்டமணி செந்திலுக்கு பிரசனை வந்தது ஒரு ரூபாயாலதான்...
இப்போ அம்மாவுக்கு பிரச்னை வந்தது கூட மாதச்
சம்பளமா வாங்கின
ஒரு ரூபாயால தான்!
@senthilcp   
யார் ஆதரவு அளித்தாலும் - அது 1 எம்.பி. கொண்ட கட்சியாக இருந்தாலும் - பாஜக ஏற்கும்: அமித் ஷா
# விட்டா காங்கிரஸ்கிட்டயே ஆதரவு கேட்பாங்க போல!
 @lakschumi 
சில அலாரங்கள் ஸ்வரமே... அதிகாலை குழந்தையின் சிணுங்கல்!!!
@Pa_Siva 
அழகர் தான் குளிக்கவாவது ஆத்துல கொஞ்சம் தண்ணிய வர வச்சிட்டு இறங்கலாம்... வருஷா வருஷம் சேத்துலயே இறங்குறாரு!

 @kumarfaculty  
சட்டையின் மேல் பட்டனை போடுவதா, வேண்டாமா என்பதை கழுத்தில் போட்டிருக்கும் தங்கச் சங்கிலியே முடிவு செய்கிறது!
@Gnanakuthu   
கொஞ்சம் கலராவோ அழகான முகஜாடையாவோ இருக்குறவங்க தமிழ்ல பேசினா அதிர்ச்சியாப் பார்ப்பான் அயல் நாட்டு(ல) தமிழன்!
@mokkaiwriter   
தன்னை
அதிபுத்திசாலி
என நினைத்துக் கொள்பவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை
கூறிக்கொண்டே
இருப்பார்கள்.  


@manipmp 
வெள்ளி விற்கிற விலையில் பேயெல்லாம் எப்படித்தான் கொலுசு வாங்கப் போகிறதோ?!

@IAnand21 
மரம் வளர்த்தா மழைவரும்னு சொன்னா ஒரு பயகூட கேக்க மாட்டான்... பணம் வரும்னு நம்பிக்கிட்டு மணி ப்ளான்ட் செடிய மாங்கு மாங்குன்னு வளர்க்கிறாங்க!

@Iam_SuMu   
வயித்தெரிச்சல் எவ்வளவு பெரிய ஆளுமையையும் ஆட்டிப் படைக்க வல்லது!

 @VenkysTwitts   
தாத்தா ஆற்றில் மீன் போலக் குளித்தார், அப்பா கிணற்றில் வாரி வாரிக் குளித்தார், நான் ஒரு வாளி நீரில் குளித்து மீதி அடுத்த நாளைக்கு சேர்த்து வைக்கிறேன்!