நியூஸ் வே



தமன்னா இந்தியில் நடிக்கும் ‘ஹம்ஷகல்ஸ்’ படத்தில் பிபாஷா பாசு, இஷா குப்தா என அவரோடு சேர்த்து மூன்று ஹீரோயின்கள். ஒரு பாடல் காட்சியில் மூவரும் பிகினி டிரஸ்ஸில் கடலிலிருந்து எழுந்து வர வேண்டும். மற்ற இருவரும் டூ பீஸ் பிகினி அணிந்தாலும், தமன்னா தயங்கினார். அதற்கு பதிலாக ஒரு குட்டி டிரௌசர் அணிந்து நடித்தார் அவர்.

சந்தானம் சமீபத்தில் வைத்த சக்ஸஸ் பார்ட்டியில் சிம்புதான் பிரதான விருந்தினர். அதனால் சில ஹீரோக்கள் வரவில்லை. இப்பொழுதெல்லாம், ‘‘என்னைக் கண்டெடுத்தது சிம்பு தான்’’ என வெளிப்படையாகவே சந்தானம் பேசுகிறார். சிம்பு படமென்றால் எப்படியாவது கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து டேட்ஸ் கொடுத்து விடுகிறார்.

ஹீரோக்கள் போலவே இசையமைப்பாளர்களுக்கும் பட்டம் போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. டி.இமானுக்கு இப்போது ஒரு படத்தில் ‘இசை பேரறிவாளன்’ என பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றிருந்தார் சமந்தா. ‘‘என் அம்மாவோட சொந்த ஊரே ஆலப்புழைதான். இருந்தாலும் என்னால் இன்னும் ஒரு மலையாளப் படத்திலும் நடிக்க முடியவில்லை’’ என்று ஏக்கத்தோடு சொன்னார். இதைத் தொடர்ந்து அவரை ஒரு மலையாளப் படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

இப்போதெல்லாம் ஆர்யா ஷூட்டிங் நடந்தால் தம்பி சத்யா வந்து உட்கார்ந்து கொள்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளைக் கூர்ந்து கவனிக்கிறார். ரீயாக்ஷன் எப்படியெல்லாம் செய்வது என பார்க்கிறார். ‘அமரகாவியத்’திற்குப் பிறகு அவரைத் தீவிரமாகக் களத்தில் இறக்க ஆர்யா தயாராகிறார். இன்னொரு சூர்யா-கார்த்தி!