தத்துவம் மச்சி தத்துவம்



‘‘பக்கத்து வீட்டுக்காரி கட்டியிருக்கற புடவை சூப்பரா இருக்குங்க...’’
‘‘இப்பவாவது என் ரசனையைப் புரிஞ்சுக்கிட்டியே பரிமளம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘திருடு போன இடத்துல இருந்தது கபாலியோட கைரேகைன்னு எப்படி பார்த்த உடனே நம்ம ஏட்டய்யா கண்டு
பிடிச்சார்..?’’‘‘கபாலியோட கை மாமூல் கொடுத்துக் கொடுத்து சிவந்த கையாச்சே... அவங்களுக்குத் தெரியாதா?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘கபாலி போற போக்கு சரியில்லை...’’
‘‘என்னாச்சு ஏட்டய்யா..?’’
‘‘ஆதார் அட்டை நகலைக் காமிச்சாதான் மாமூல் தருவேன்ங்கிறான்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘ஆனாலும் இப்படி தலைவரை
அநியாயத்துக்குப் பழிவாங்கக் கூடாது...’’
‘‘எப்படி..?’’

‘‘அதிகமா ஓட்டு வேட்டையாடினாருன்னு சொல்லி ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் கைது பண்ண வந்திருக்கு தாம்..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘ஏர்போர்ட்டுக்குப் போற வழியில மரத்தை வெட்டிப் போட்டிருக்கீங்களே... ஏன் தலைவரே?’’
‘‘நம்ம ஆதரவு இல்லாம யாரும் டெல்லிக்குப் போக முடியாது!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

என்னதான் ஒரு படம்விடாம ஒரு நடிகை மினிமம் டிரஸ்ல வந்தாலும், அவங்களை யாரும் ‘மினிமம் கேரன்டி நடிகை’ன்னு சொல்ல மாட்டாங்க!
- மினிமம் டிரஸ்ஸை மேக்ஸிமம் அணியும் நடிகைகளை நினைத்து தத்துவ ஜொள்ளை வடிப்போர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘போராட்டத்துக்கு வந்தவங்க கிட்ட ‘போர்க்குணத்துடன் இருக்கணும்’னு நீங்க சொல்லியிருக்கக் கூடாது தலைவரே...’’
‘‘ஏன்யா... என்ன ஆச்சு?’’
‘‘எல்லாரும் புறமுதுகிட்டு ஓடிட்டாங்க!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.