ஜோக்ஸ்



தலைவருக்கு ஞாபக சக்தி ரொம்ப
அதிகம்...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘அவரை பார்க்கப் போனப்போ, ஆறு மாசத்துக்கு முன்னால நான் அவர் மேல வீசின செருப்போட கலரைக்கூட கரெக்டா சொல்றாரே!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘பொதுக்கூட்டத்துல என்ன ரகளை?’’
‘‘தலைவர் மேல செருப்பு வீசறதுக்கும் டோக்கன் போட்டு
கட்டணம் வசூலிக்கறாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

க்ளினிக்ல அட்மிட் ஆன பிறகு ஏதாவது மாற்றம் தெரியுதா
தலைவரே..?’’
‘‘ஓ... மகளிரணித் தலைவி வந்துக்கிட்டிருந்த கனவுல இப்ப நர்ஸ் வர்றாங்க...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

தத்துவம் மச்சி தத்துவம்

ஆயிரம் பஸ்சுக்கு
ஓனரா இருந்தாலும்
கடைசியில ஒருநாள்
அவருக்கும் மேல போக
டிக்கெட் எடுத்துத்தான்
ஆகணும்! படிக்கட்டில் நின்று தத்துவம் பிடிக்கும் அரை டிக்கெட்டுகள் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

என்னதான் பருந்து வானத்துலேயே வட்டமிட்டாலும், அதால சதுரம், முக்கோணம், செவ்வகம் எல்லாம்
இட முடியாது!
- பறந்து பறந்து பல கோணங்களில்
யோசிப்போர் சங்கம்
- என்.கஜேந்திரன், நிரவி.

எனக்கு ஏன் திடீர்னு ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் வந்துக்கிட்டு இருக்கு..?’’
‘‘தொண்டர்கள் மிஸ்டு கால் கொடுத்தால் கட்சியை விட்டு விலகறேன்னு நீங்க சொன்னதா யாரோ கொளுத்திப் போட்டுட்டாங்க
தலைவரே!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

தலைவர் மப்புல இருக்கார்னு எதை வச்சு சொல்றே..?’’
‘‘என்னை எப்போ ஆட்சிக் கட்டிலில் படுக்க வைப்பீங்கன்னு
கேட்கிறாரே..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.