லவ் பண்ண டைம் கொடுங்க!சிருஷ்டி டாங்கே லொள்ளு

சித்தார்த்துடன் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ ஹேப்பியில் இருக்கிறார் ‘டார்லிங்’ கேர்ள் சிருஷ்டி டாங்கே. ‘புத்தம் புதுக்காலை... பொன்னிற வேளை...’ என ‘மேகா’ பாடலில் பட்டுப் பாவாடை, தாவணி காஸ்ட்யூமில் கன்னக்குழி தெரிய சிரிக்கும் பொண்ணு. சுசீந்திரன் தயாரிப்பில் ஒரு படம், நரேனுடன் ‘கத்துக்குட்டி’ தவிர, இன்னும் 3 படங்கள் கைவசம். ஸோ, சிருஷ்டி இப்போ புஷ்டி!‘‘உங்களுக்கே தெரியும். ‘சிருஷ்டி’ன்னா க்ரியேஷன்னு அர்த்தம். டாங்கே எங்க குடும்பப் பேர். பூர்வீகம் மும்பை.

ஜர்னலிசம் படிச்சிருக்கேன். மாடலிங்ல இருந்து சினிமாவுக்கு வந்தேன். விளம்பரப் பட போட்டோ ஷூட் பார்த்து, ‘மேகா’ சான்ஸ் கிடைச்சது!’’‘‘நீங்க மும்பை பொண்ணு. ஆனா, தமிழ் நல்லா பேசுறீங்களே..?’’‘‘மிக்க நன்றி. மொழி தெரிஞ்சு நடிக்கறப்ப, கேரக்டரோட முழு உணர்வையும் வெளிப்படுத்துறது ஈஸி. மும்பையில இருந்து சென்னை வந்த புதுசுல ‘வா’, ‘போ’னு சிங்குலர்லதான் பேசினேன். ‘மேகா’ ஷூட்டிங்லதான் தமிழ் கத்துக் குடுத்தாங்க. எது பேசினாலும் ‘ங்க...’ போட்டு பேசணும். ‘வாங்க.. போங்க..’ன்னு சொல்றதுதான் மரியாதைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

ஆனா, தமிழ்லதான் எவ்வளவு ஸ்லாங்! ‘கத்துக்குட்டி’க்காக தஞ்சாவூர் தமிழ் பேச சொல்லிக் குடுத்தாங்க. கத்துக்க ரொம்ப சிரமப்பட்டேன். இன்னொரு பட ஷூட்டிங்குக்காக கோவை போனேன். அங்கே வேற மாதிரி பேசுறாங்க.. பட், ஐ லவ் தமிழ்!’’

‘‘ ‘டார்லிங்’ அனுபவம்..?’’‘‘லவ்ல ஏமாத்துற காலேஜ் பொண்ணுங்கறது கொஞ்சம் நெகட்டிவ் ரோல்தான். ஆனாலும் ஒரு சக்ஸஸ் டீம்ல வொர்க் பண்ணின அனுபவம் சூப்பரா இருந்தது. அந்தப் படத்துல நடிச்சப்ப எனக்கு பேய் பத்தி எந்த பயமும் தெரியலை. ஆனா, தியேட்டர்ல படம் பார்க்குறப்ப பயந்தேன். நல்லவேளை... அதுல நான் பேயா நடிக்கலை. பேய்னாலே எனக்கு பயம்தான். கும்மிருட்டுன்னா இன்னும் பயம் ஜாஸ்தி. நான் இருக்குற இடத்துல பிரைட்டா லைட் இருக்கணும்!’’‘‘சித்தார்த்..?’’

‘‘ ‘எனக்குள் ஒருவன்’ல சித்தார்த் காம்பினேஷனில் மொத்தமே 20 நாட்கள்தான் நடிச்சேன். ‘மேகா’ல ஹோம்லின்னா, இதில் செம மாடர்ன் காஸ்ட்யூம்ஸ்ல கலக்கியிருக்கேன். கன்னடத்தில் ‘லூசியா’வா வந்தப்பவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கேன். செம இன்ட்ரஸ்ட்டிங் ஸ்கிரிப்ட் அது!’’ ‘‘நிக்கி கல்ரானி, தீபா சன்னிதின்னு ரெண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டா பண்றீங்களே..?’’

‘‘ ‘டார்லிங்’ல ஜி.வி.பிரகாஷும் புரொடியூசரும் கேட்டுக்கிட்டதால நடிச்சேன். அதுல என் கேரக்டரும் அப்ளாஸ் அள்ளிச்சு. ‘எனக்குள் ஒருவன்’ல ட்ரீம் ரோல். ஸோ, அருமையான மாடர்ன் காஸ்ட்யூம், ரிச் லுக்னு சும்மா அட்டகாசமா வர முடியும். அதனாலதான் சம்மதிச்சேன். ஆனா, அதுக்குப் பிறகு இப்ப நடிக்கிற படங்கள் எல்லாமே சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட்தான்!’’‘‘இப்போ நடிக்கற படங்கள்...’’

‘‘சுசீந்திரன் தயாரிப்பில் சுரேஷ் டைரக்ட் பண்ற ஒரு படம். பொங்கல் பண்டிகை அப்போ கோயம்புத்தூர்ல இந்தப் படத்தோட ஷூட்டிங்லதான் இருந்தேன். தமிழ்நாட்டுக்கு பொங்கல், ஸ்வீட் ஃபெஸ்டிவல். ஒருநாள் ஃபுல்லா பொங்கல் சாப்பிட்டுக்கிட்டே இருந்தேன். நரேனோட ‘கத்துக்குட்டி’ ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. அப்புறம் ‘வருஷநாடு’, ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’னு பிஸியா ஓடிட்டிருக்கேன்!’’‘‘உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ..?’’

‘‘வேற யாரு.. அஜித் சார்தான். அவரோட ஒரு படமாவது நடிச்சிடணும்!’’‘‘நீங்க காலேஜ் டேஸ்ல லவ் பண்ணி... அதனால யாரும் தாடி வளர்த்து..?’’‘‘நோ... நோ... படிச்சு முடிக்கவே டைம் சரியா இருந்துச்சுங்க. இதுவரை லவ் பண்ணினதில்லை. கொஞ்சம் டைம் கொடுங்க... ஒரு தடவை லவ் பண்ணிட்டு, எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன்..!’’

- மை.பாரதிராஜா