ஜோக்ஸ்



என்னதான் ஒரு ஹீரோ சினிமாவுல திருடனா நடிச்சாலும், அவருக்கு மேக்கப் ரூம்லதான் மேக்கப் போடுவாங்க; லாக்கப் ரூம்ல போட மாட்டாங்க!
- ஜெயிலில் கம்பி எண்ணும்போது கால்குலேட்டர் யூஸ்
பண்ணாதோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘இந்த மாத்திரைகளை சாப்பிட்டுட்டு மறுபடியும் அடுத்த வாரம் வந்து பாருங்க...’’
‘‘உங்களுக்காக இல்லைன்னாலும், உங்க நர்ஸைப் பார்க்க கண்டிப்பா வர்றேன் டாக்டர்!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘நான் தனி ஆள் கிடையாது...’’
‘‘வாஸ்தவம்தான் தலைவரே.... இந்த ஜெயில்ல மொத்தம் ஆயிரம் கைதிங்க இருக்காங்களே!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘கண் ஆபரேஷனே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்த தலைவர், இப்போ திடீர்னு ஆபரேஷனுக்கு சம்மதிச்சுட்டாரே... ஏன்?’’
‘‘மகளிரணித் தலைவி மங்கலா தெரியறாங்களாம்!’’
- மு.மதிவாணன், அரூர்.

என்னதான் போஸ்ட் ஆபீஸ்ல ஸ்டாம்புக்கெல்லாம் முத்திரை குத்துவாங்கன்னாலும், அங்கே யாரும் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்த மாட்டாங்க!
- நித்திரை இல்லாமல் தவிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘உண்மையை பேசணும்... நாலு முறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டுக்கு ஏன் வரலை?’’
‘‘இப்போ சொன்னீங்களே ‘உண்மையை பேசணும்’னு... அதனால தான் யுவர் ஆனர்!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘தலைவர் பணக் கஷ்டத்துல இருக்கலாம்... அதுக்காக இப்படி வெளிப்படையாவா பண்றது?’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘கட்சியிலே இருக்கிற ஒரே எம்.எல்.ஏவை ளிலிஙீல போட்டு விக்கறதுக்கு முயற்சி பண்றாரே!’’
- எஸ்.ராமன், சென்னை-17.