இது நம்ம ஆளா?
வுட்பிக்கு ஒரு உளவியல் டெஸ்ட்
ஒரு நல்ல திருமண வாழ்வில் மனைவிக்கு கண் தெரியக் கூடாது... கணவனுக்கு காது கேட்கக் கூடாது!
-மிச்சேல் டி மான்டெய்ன்

காதலிப்பதில் எல்லாம் கன்ஃபியூஷனே இல்லை. காதலித்த பெண்ணை - பையனை திருமணம் செய்துகொள்ளலாமா? இதுதான் இன்று பெரும் பிரச்னை. நகர்ப்புறங்களில் இப்போதெல்லாம் பெற்றோர் வேறு சுலபத்தில் சம்மதித்து விடுகிறார்களா... பொறுப்பு கூடிவிடுகிறது யூத்களுக்கு!‘‘அவன் நல்லா செலவு பண்ணுவான். கவலையே இல்லாம எப்பவும் சிரிச்சிட்டிருப்பான். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே லூசா இருந்துடுவானோ!’’ என மிரள்கிறாள் பெண்.

‘‘அன்பா இருக்கா. நான் சொன்னதை எல்லாம் கேக்கறா. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுவாளோ!’’ என அரண்டு போகிறான் ஆண்.இனி, இந்தக் குழப்பமே வேண்டாம். ஒரு சின்ன டெஸ்ட்... உங்கள் வுட்பி கல்யாணத்துக்கு ரெடியா எனக் கச்சிதமாய்ச் சொல்லிவிடும் சைக்காலஜி டெஸ்ட். அப்படியொன்றை நமக்காக இங்கே வடிவமைத்துத் தந்திருக்கிறார் உளவியல் நிபுணர் வாசுகி மதிவாணன்.
‘‘வேலைக்கு ஆளெடுக்கும் போது புத்திசாலியா... அவர் ஐ.க்யூ எப்படி... எனப் பார்க்கிறோம் இல்லையா? அதுமாதிரி கல்யாணம் செய்துகொள்ளும் முன் பார்ட்னரின் ணி.னி எப்படி எனப் பார்க்க வேண்டும். ணி.னி என்றால் எமோஷனல் கோஷன்ட். ஒரு உணர்ச்சிகரமான பந்தத்துக்கு அவர் தகுதியா என இதில் அறியலாம்!
திருமணத்துக்கு முதல் தகுதி தன்னை அறிதல். சுய கட்டுப்பாடும் தன்முனைப்பும் இரக்க குணமும் திருமண வாழ்வுக்கு அவசியம். சமூகத்தோடு ஒட்டி ஒழுகும் கலையும் இன்றியமையாதது. இவை அனைத்தையும் ஆராயும் சோதனை இது. சோலோவே மற்றும் மேயர் எனும் நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சோதனை, உளவியல் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது!’’ என்கிற வாசுகி மதிவாணன், ‘‘இந்த உளவியல் டெஸ்ட் ஒரு ஐடியாவுக்குத்தான். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து யாரையும் நிராகரிக்கவோ ஏற்கவோ வேண்டாம்!’’ என்கிறார் எச்சரிக்கை உணர்வோடு!
இனி டெஸ்ட்....
(கீழ்வரும் ஸ்டேட்மென்ட்களுக்கு உங்கள் ரியாக்க்ஷன் என்ன? விடைகளில் ஒன்றை டிக் செய்யுங்கள்!)
1. எனக்கான துணிமணிகள், ஷூ, ஆபரணங்கள் வாங்கும்போது அடுத்தவர் ஆலோசனைகளை ஏற்பேன்!
A. கண்டிப்பாக, B. ஓரளவுக்கு,
C. இருக்கலாம், D. இல்லை,
E. இல்லவே இல்லை
2.என் செலக்ஷனை யாரும் விமர்சனம் செய்தால் செம டென்ஷன் ஆவேன்!
A. கண்டிப்பாக, B. ஓரளவுக்கு,
C.இருக்கலாம், D. இல்லை, E.இல்லவே இல்லை
3.தேர்ந்தெடுக்க முடியாமல் பல நேரங்களில் குழம்பிப் போவேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
4.நான் எப்படிப்பட்ட கேரக்டர் என்பது எனக்கு நன்றாகவே - சரியாகவே தெரியும்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
5.என் மூட் அடிக்கடி மாறும்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
6.சீக்கிரம் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
7.என்னைக் கோபப்படுத்தும் நபர்களோடு பழக மாட்டேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
8.கலைகளில் கவனம் செலுத்துவதால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பு
கிறேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
9.யாராவது என்னை விமர்சித்தால் கோபத்தில் வாக்குவாதம் புரிவது எனக்கு சகஜமப்பா!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
10.வீட்டு டென்ஷனை ஆபீஸிலும், ஆபீஸ் டென்ஷனை வீட்டிலும் காட்டுவது தவிர்க்க முடியாதது பாஸ்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு, சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
11.ஏதாவது தோல்வி வந்தால், நான் கூலாக அதன் காரண காரியங்களை ஆராய்வேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
12. விதிதான் மனித வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது என நம்புகிறேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
13.வருத்தப்படும்போது, மற்றவர் அறிவுரைகளையும் உதவிகளையும் நாடுவேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
14.யாருக்கும் ஆதரவான ஆளாக இருக்க எனக்கு ஆசையில்லை!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
15.வாழ்வின் பல சிக்கலான தருணங்களில் நானாகத்தான் அதிலிருந்து மீண்டு வந்தேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
16.ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்கும்போது, என் பாஸ் அல்லது உடன் வேலை பார்ப்பவரிடம் பாராட்டை எதிர்பார்ப்பேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
17.தோல்வி ஒன்றைச் சந்தித்த பின் அடுத்த வேலையைத் துவங்க எனக்கு கொஞ்ச காலம் பிடிக்கும்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
18. நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட மதிப்புகள் தாமதமானால், என்னால் கவலைப்படாமலோ, பிரச்னை செய்யாமலோ இருக்க முடியாது!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
19.ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் அதை கவனிக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
20.அடுத்தவரை அவர் கோணத்தில் இருந்து பார்த்து புரிந்துகொள்ள என்னால் முடியும்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
21.உரையாடலின்போது அடுத்தவர் மாற்றுக்கருத்துக் கொண்டிருக்கிறார் எனத் தெரிந்தால், உடனே பேச்சை மாற்றிக்கொள்வேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
22.ஒருவரிடம் பேச விழையும்போதே அவர் அதற்கான சரியான சூழ்
நிலையிலும் மூடிலும் இருக்
கிறாரா என்பதை கவனிப்பேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை, ணி. இல்லவே இல்லை
23.உடல்மொழி, குரல், பாவனை எல்லாவற்றையும் வைத்து ஒரு மனிதரை நான் நிமிடத்தில் கணித்து விடுவேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
24.நான் பேசுவதை அடுத்தவர் கேட்கவில்லை என்றால் கடுப்பாவேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
25.பரஸ்பரம் புரிந்துகொள்வதும் ஏற்பதுமே உறவுகளின் அடிப்படை என நம்புகிறேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
26.அலுவலகத்தில் ஒரு சூடான விவாதம் வெடிக்கும்போது அதை அமைதிப்படுத்தும் முதல் நபர் நான்தான்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
27.ஒருவருக்கு நன்றாக வேலை தெரிந்திருப்பதை விட ஒருவருக்கொருவர் பழகும் திறன் அதிக
மிருந்தால்தான் வேலை சிறப்பாக நடக்கும் என்பது என் நம்பிக்கை!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
28.மனிதர்களைத் திறமையாகக் கையாளுவதன் மூலம் அனைவரையும் என் நண்பராக்கிக் கொள்வேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
29.இந்தப் போட்டி உலகில் பொறாமையும் பகையும் தவிர்க்கவே முடியாதவை!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
30.புதியவரிடம் நானாகப் பேச்சுக் கொடுப்பது ரொம்பவே கஷ்டம்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
31.அடுத்தவரைப் பாராட்டுவதற்கு நிறையவே தயங்குவேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
32.பழகும் அனைவரிடமும் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள விரும்புவேன்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
33.உடன் பணிபுரிபவர்களிடம் தனிப்பட்ட அன்பை வளர்ப்பது பணி நிமித்தமான குழு முயற்சிகளுக்கு உதவும்!
கி. கண்டிப்பாக, ஙி. ஓரளவுக்கு,
சி. இருக்கலாம், ஞி. இல்லை,
ணி. இல்லவே இல்லை
இப்போது ரிசல்ட்...
130 முதல் 165 மார்க் வரை = நல்ல மனசுக்காரர். அவர் சொல்லியிருக்கும் பதில்கள் உண்மையானவை என்றால், கல்யாணத்துக்கு உடனே ஏற்பாடு பண்ணலாம். அந்தளவுக்கு நல்லவர். தன் உணர்வு என்ன, தன் தேவை என்ன என்பதிலெல்லாம் செம தெளிவு இவருக்கு உண்டு. கவலை, குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், அவமானம், நம்பிக்கையின்மை போன்ற நெகட்டிவ் குணங்கள் இல்லாதவர். அடுத்தவரைப் புரிந்து கொள்ளவும் தன்னை வளர்த்துக்கொள்ளவும் கூடிய இவர் உங்கள் வாழ்வுக்கு வரப்பிரசாதம்.
80 முதல் 129 வரை = மிதமான குணமுள்ளவர். இவர் ஓகே. ரொம்பவும் பளபள பாசிட்டிவ் விஷயங்கள் இல்லை என்றாலும் நெகட்டிவ்கள் இவரிடம் கம்மி. ஆபத்தில்லாதவர். பாசிட்டிவ் அம்சங்களும் தன்னம்பிக்கையும் உங்களிடம் இருந்தால், பேலன்ஸ் செய்துகொள்ள முடியும். பெரும்பாலானவர்கள் இந்த வரையரைக்குள்தான் வருவார்கள் என்பதால் எண்ணித் துணிக... ஏகபோகமாய் வாழ்க!
33 முதல் 79 வரை = முதலில் பார்த்த வகைக்கு அப்படியே நேர் மாரான கேரக்டர். சுயக் கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் இவருக்கு தண்ணி காட்டும். தன்னைப் பற்றியே சரியான தெளிவிருக்காது. இந்த டெஸ்ட் எடுத்துக்கொண்டபோது சரியான மனநிலையில் இல்லாதிருந்தால் கூட சிலருக்கு இப்படி ரிசல்ட் வரலாம். எனவே, சடாரென்று எதையும் நிறுத்தாமல் பொறுமையாக அவரை பரிசீலிப்பது நல்லது. நண்பர்களே... இது விடைபெறும் நேரம்.
பெண்களை ஆண்களும், ஆண்களை பெண்களும் இடையறாது ஈர்த்துக்கொண்டே இருப்பதுதான் உலகம்!எல்லா பெண்களிடமும் போய் லவ் யூ சொல்லிவிட முடியாது. அதற்காக, ‘யக்கா’ எனவும் கூடாது. காதலுக்கும் சகோதரப்பாசத்துக்கும் இடைப்பட்டதோர் யெல்லோ சிக்னல், எல்லோருக்குள்ளும் உண்டு. நம் அலங்காரம் முதல் அகங்காரம் வரை அனைத்துக்கும் காரணம் - காதல் அல்லாத, திருமணம் சாராத, காமம் வரை போகாத - இந்த கேஷுவல் எதிர் பால் ஈர்ப்புதான்.
இந்தத் தொடர் விரிவாகப் பேசியது அதைத்தான். இயல்பாக நமக்குப் பழகிப் போன சில உணர்ச்சிகளை ‘ஏன் இப்படி?’ எனக் கேள்வி கேட்கவும் தெளிவு பெறவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தப் பயணத்தில் நம்மை விரல் பிடித்து நடக்க வைத்த நிபுணர்களுக்கும் இணைய தளங்களுக்கும் புத்தகங்களுக்கும் நன்றி சொல்வோம். மீண்டும் சந்திப்போம்!
-நிறைவு!
கோகுலவாச நவநீதன்