அப்பா என்ன தந்தார்?



ஸ்ருதி ஹாசன்

* துபாயில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘ரேஸ் குர்ரம்’ தெலுங்குப் படத்துக்காக சிறந்த நடிகை விருது பெற்ற குஷியில் இருக்கிறார் ஸ்ருதி. ‘இந்த ஆண்டு ரொம்ப நல்ல ஆண்டு’ என கொஞ்சு தமிழில் திளைக்கிற நம்ம ஊர் அழகுப் பெண்,
ஃபிட்னஸ் முதல் ஃப்ரீடம் வரை சகலமும் பேசுகிறார்!

* ஒல்லியாக இருப்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. மன வலிமையே என் உடலமைப்புக்கான காரணம். ஷூட்டிங் முடிந்து இரவு 1  மணிக்கு வந்தாலும் கூட, மறுநாள் உடற்பயிற்சி செய்து விடுவேன். இந்தப் பழக்கம் அப்பா எனக்குத் தந்தது!

* இந்த பளபள சருமம் என் பெற்றோரிடமிருந்து வந்தது. எந்த ஒரு அழகுப் பராமரிப்பையும் நான் முறையாகச் செய்வதில்லை.  படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் உச்சி முதல் உள்ளங்கால் வரை தேங்காய்  எண்ணெய் பூசிக் கொள்வதை தவறாமல் கடைப்பிடிக்கிறேன்.

* மனதை எப்போதும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதே அழகின் ரகசியம்.



* ஷூட்டிங்குக்கு இடையே போரடிக்கும் நேரங்களில் டப்ஸ்மேஷ், கேன்டி க்ரஷ் விளையாடுவதும், ட்விட்டரில் ஷேர் செய்வதும் எனக்குப் பிடிக்கும்.

* டைரக்டர் ஆவதும் தயாரிப்பாளர் ஆவதும் என் கனவு.

* சமூக வலைத்தளங்களில் ரசிகர்களோடு உரையாடுவதை பெரிதும் விரும்புகிறேன். ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவர்களின் கருத்துகளை அறிய முடிகிறது.

* நான் டோலிவுட், கோலிவுட் என வித்தியாசம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு இயக்குநருமே நல்ல நடிப்பைத்தான் எதிர்பார்க்கிறார். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது என் கடமை. என் வேலையும் அதுதானே?

* பெர்ஃபெக் ஷன்... இதை நான் ஒருபோதும் விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை. இதுவே என்னுடைய வெற்றி மந்திரம்!      

* நம் நாட்டைப் பொறுத்த வரை நடிகைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  

* சென்னை, மும்பை... இரு நகரங்களுமே எனக்குப் பிடித்தவை. சென்னையை அதன் நினைவுகளுக்காகவும் பாரம்பரியத்துக்காகவும் நேசிப்பதைப் போலவே, மும்பையை அதன் சுறு சுறுப்புக்காகவும் வெளிப்படைத்தன்மைக்காகவும் விரும்புகிறேன்.

* பாடகியாக திரை உலகில் நுழைந்த எனக்குள் நடிப்பு ஆர்வமும் இயல்பாகவே வளர்ந்து வந்திருக்கிறது.

* எனக்குப் பிடித்த சுதந்திரமான வாழ்க்கையை, அதன் போக்கிலேயே, என்னுடைய சொந்த பொறுப்பிலேயே, அன்போடும் பரிவோடும் பகிர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்.