சமர் சரியான புத்தக விரும்பி!
சுந்தரி நடராஜன்
சமருக்கு இன்று காலையில் இருந்தே ஒரு சந்தேகம். ஏன் கல்யாணம் ஆனால் பொண்ணுங்க பையன் வீட்டில் போய் வாழணும்? ஏன் பையன் பொண்ணு வீட்டுல போய் வாழுறது இல்லனு. என் அம்மா, தம்பி சொன்ன பதில் அவனுக்கு திருப்தியில்லை. பொதுவாக சமருக்கு பதில் கன்வீன்சிங்கா இல்லை என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டான். பதில் சொல்றவங்களிடம் கேள்விகளை வேறு வேறு விதத்தில் கேட்பான். அவர்களின் பதில் முதலில் சொல்வதை ஒற்றியே இருந்தால், அடுத்து யாருகிட்ட அதே கேள்வியை கேட்கலாம்னு பார்ப்பான். இந்தக் கேள்விக்கு இப்போ வரை அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. இன்னும் விடை தேடிக்கிட்டே இருக்கான் ஒவ்வொருவரிடமும் :-)

G+ல் நேற்று முந்திரிக்கொத்து போஸ்ட் பார்த்ததில் இருந்து ஒரே டெம்ப்டிங்கா ஆகிடுச்சு. இன்று காலையில் 5:30 மணிக்கு என் அம்மாக்கு போன் போட்டால், அவங்க, ‘இவ்வளவு சீக்கிரம் போன் செஞ்சிருக்க... என்னாச்சு? புள்ள எல்லாம் நல்லாயிருக்கா’னு ஒரே கேள்வி. ‘எல்லாரும் நல்லாயிருக்கோம். முந்திரிக்கொத்து ரெசிபி கேட்கதான் போன் செஞ்சேன்’னு விளக்கி ரெசிபி கேட்டு இதோ முந்திரிக்கொத்து செஞ்சாச்சு! சமர் முந்திரிக்கொத்தை பார்த்துட்டு, ‘அம்மா இதைப் பார்க்க DNA தனித்தனியாக இருக்கிற மாதிரி இருக்கு :-) இதை வச்சி ஒரு புராஜெக்ட் செய்யணும்... இனிமேல் செஞ்சா நிறைய செய்யுங்க’னு சொல்றான்:-P
ஹாஸ்பிட்டல் போனால் அங்க வெயிட்டிங் டைமை சமாளிக்க பக்கத்தில இருக்கிற கடைக்குள்ள போய் புக் பக்கத்தில உட்கார்ந்துக்கிறான். பஸ் ஸ்டாப்பிலும் இப்படி புத்தகம் கையுமாதான் உட்கார்ந்திருக்குறான். கையில இரண்டு புத்தகம் இல்லாமல் புள்ள வெளியே வரவே மாட்டேங்கிறான். நடக்கும் போதும் படிச்சிக்கிட்டே வரான். இதுல அவனுக்கு ஃபீலிங் வேற... ‘நான் வளராமல் குட்டியாக இருந்தா Stroller ல உட்கார்ந்து ஜாலியா படிச்சிக்கிட்டே வரலாம்... நான் ஏன் வளர்ந்தேன் அம்மா’னு! சமர் சரியான புத்தக விரும்பி! அவனுக்கு பிடித்தமான அனிமல்ஸ் ஏரியா மட்டும் Focus செய்யாமல் இப்போ எல்லா விதமான புத்தகமும் வாசிக்க தொடங்கியிருக்கான்! நாவல்களும் வாசிக்க ஆரம்பிச்சிருக்கான். லைப்ரரியில் அவன் விரும்பும் புத்தகத்தை அவனே லைப்ரரி சைட்ல தேடி எந்த Shelfல இருக்கும் என்று தேடிப் படிக்க ஆரம்பிச்சிருக்கான்! ஆறு வயது செல்லக்குட்டி நிரூபிச்சிக்கிட்டே இருக்கான். அம்மா, நான் வளர்கிறேன் என்று :-) Keep reading my sweet boy! #சமர்_Updates
|