ப்ரியங்களுடன்...........



நேரம் காலம் தெரியாமல் இந்த நேரத்திலா உலகின் டாப் 10 அழகிய சாலைகளை எங்கள் கண்களுக்குக் காட்டணும்? குண்டும் குழியுமாக உள்ள நம்ம ஊர் சாலைகளை நினைத்து நொந்து போனோம்!
- என்.சாந்தினி, மதுரை, என்.ஜெயம் ஜெயா, காரமடை, வி.கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி மற்றும் கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

ஆச்சரிய மனுஷிகள் 5 பேரும் வெள்ளி குத்துவிளக்கின் 5 முக ஒளிகளாக பிரகாசித்து வியப்பூட்டினர். அர்ச்சனா ரகோத்தமன் கூறிய ‘வெற்றி தோல்வியை தீர்மானிப்பது மனசுதான். முடியும்னு நம்புற மனசுக்கு எப்போதும் வெற்றிகள் சாத்தியம்’ என்ற வரிகள் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தன.
- சிம்மவாஹினி, வியாசர்பாடி., வத்சலா சதாசிவன் மற்றும் ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

தக தக தங்கம் கட்டுரை வாயிலாக புரம் தங்கக்கோயில் பெருமையையும், சிதம்பரம் பொற்கூரை பற்றிய சிறப்பினையும் அறிவித்ததோடு, 21,600 தங்க ஓடுகள், 72,000 தங்க ஆணிகள் என்ற புள்ளி விவரத்தையும் அளித்தது வியக்க வைத்தது!
- ஆர்.ராஜேஸ்வரி ராமகிருஷ்ணன், துறையூர்., அமலா அறிவரசு, திருச்சி-7., கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர் மற்றும் வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

‘கற்பது கற்கண்டே’ - விமலா சஞ்சீவ்குமார் கசப்பையே இனிப்பாக்கி தந்துவிட்டார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் படிக்கல்தான். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின!
‘கடன் கேட்டுப் பாருங்கள்’ இளம்பிறை என்னமாக அசத்திவிட்டார்! தலைப்புப் பகுதியே யோசிக்க வைத்தது. படிக்க, படிக்க பழசெல்லாம் நினைவிற்கு வந்தது எனக்கு!
- ராஜேஸ்வரி குருசாமி, ஆதம்பாக்கம், சென்னை.



பசுமைக்குடில் பற்றி கேள்விப்பட்டிருந்த எனக்கு அதன் முழுத்தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உபயோகம், அமைக்கும் விதம், செலவு, பராமரிப்பு என அனைத்து விவரங்களும் நல்ல விழிப்புணர்வை கொடுத்தது.
- மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9.

‘35 வயதினிலே’ - என் எண்ணம் வாசித்தேன். அருமை. எந்த வயதிலும் பெண்களை உற்சாகப்படுத்தினால் மேலும் ஜொலிப்பார்கள். ஒவ்வொருவரும் நம்முடைய சகோதரிகளை, உறவுப் பெண்களை, தோழிகளை அவர்கள் செய்யும் நற்காரியங்களுக்கு பாராட்டுவோம்!
- எஸ்.வளர்மதி, கொட்டாரம், கன்னியாகுமரி.

‘அதிசயத்தின் அதிசயம்’ - நியூயார்க்கின் அடையாளமான ப்ரூக்ளின் பாலம் கட்டிய எமிலியின் சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்டது ரொம்பவே போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரியது.
- மயிலை கோபி, சென்னை-83.

வாழ்க்கையில் தொட்டதற்கெல்லாம் சுருங்கிப் போகிறவர்கள் ஆச்சரிய மனுஷிகளைப் பார்த்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
  - ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91.

ஆச்சரிய மனுஷிகளின் வெற்றிக்கு காரணம் அவர்களின் உடல் ஊனமாகினும் உறுதியான உள்ளம் பெற்றிருப்பதுதான்.
- வளர்மதி ஆசைத்தம்பி, விளார், தஞ்சாவூர்-6.

விளம்பர சந்தையை விரிவுபடுத்த தத்தமது தொலைக்காட்சி பெட்டி தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதில் கவரப்பட்டு சரியான தரம் எதுவென்றும் தெரியாமல் இருந்த நிலையை கிர்த்திகா தரனின் டெலிவிஷன் பற்றிய தொகுப்பு முற்றிலுமாக நீக்கி விட்டது. வாழ்த்துகள் கிர்த்திகா தரன்!
- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.