ப்ரியங்களுடன்...



‘‘சுமந்த கைகளைப் பற்றிக் கொள்வோம்’’ கட்டுரையைப் படித்தபின் கண்களில் கண்ணீர் பனித்தது. முதுமையை - முதியவரை பாதுகாப்பது குறித்த செய்தி மெய்சிலிர்க்க வைத்தது. இத்தகவலை சரியான நேரத்தில் வெளியிட்ட தோழிக்கு கோடானு கோடி நன்றிகள்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

ஹெல்த் ஸ்பெஷல் ஒரு சமய சஞ்சீவி என்றே கூறலாம். மழைக்காலத்தில் உடல் நலம் பேண நல்ல பல தகவல்களை வாசக / வாசகியருக்கு வழங்கியிருந்த விதம் அருமை.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.

மழைக்கால தோட்டப் பராமரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சர்க்கரை நோயாளிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு ‘மழைக்காலம்’ தந்த மருத்துவ ஆலோசனைகள் ஒரு முழு ‘செக்கப்’ செய்தது போலிருந்தது. ‘வானவில் சந்தை’யில் ‘வீடு பேறு’ பயனுள்ள அரிய தகவல்களைத் தந்தது.
  - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமுள்ள இக்காலத்தில் தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் வாயிலாக ஆரோக்கிய வாழ்விற்கான வழிகண்டு கொண்டோம். மூலிகைச் செடிகளான வல்லாரை, தூதுவளை, முள் முருங்கை, துளசி இவற்றில் சூப் வைப்பது குறித்து சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியத்தின் மருத்துவ தகவல்கள் உணவு முறையைப் பொறுத்தே உடல் ஆரோக்கியம் எனப் புரியவைத்தது.
  - வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவிந்திரன், நாகர்கோவில்.

 கோடைக்கால சுற்றுலாத் தலங்கள் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் மழைக்கால சுற்றுலாத் தலங்களை பற்றி தோழியின் வாயிலாக தெரிந்துகொண்டோம். செல்லுலாய்ட் பெண்கள் தொடரில் அஞ்சலி தேவி குறித்த கட்டுரை அட்டகாசம்.
- வத்சலா சதாசிவன், சென்னை-64.
 
ஆண்கள் உலகின் ஆளுமை செலுத்திய நாயகி அஞ்சலி தேவியின் அருமையான செய்திகள் இன்றைய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெண்கள் சமூகத்துக்கே ஒரு வரலாற்றுப் பாடம். நடிகை, தயாரிப்பாளர் அதைவிட மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் என எண்ணும்போது உண்மையில்  பெருமைகொள்ளத் தக்க விஷயம். ‘மழைக்காலச் சுற்றுலா’ படத்துடன் காட்சி தந்த கட்டுரை பயனுள்ளது.
- தி.பார்வதி, திருச்சி.

இளம்பிறை எழுதிய ’சொத்து பத்து ஏதுமில்லே... சொந்த முன்னு யாருமில்லே’ கண்ணீர் விட வைத்தது.
- எஸ்.சிவசங்கரன், ஈரோடு.

பால் இனிப்புகளை பலவிதமாக தந்து வீட்டிலுள்ள வாண்டுகளின் நாக்குக்கு சுவையூட்டியமைக்கு முதலில் பாராட்டுக்கள்.  
- சுகந்தி நாராயணன், வியாசர்நகர்.