டவுட் கார்னர்



வீட்டைப்பூட்டி விட்டேனா என்று அடிக்கடி சந்தேகம் எழுகிறது. தெருமுனை வரை வந்த பிறகும் கூட திரும்ப சென்று இழுத்துப் பார்க்கிறேன்? இதற்கு என்ன தீர்வு?
- தி.சங்கீதா, சென்னை

மோகன் வெங்கடாசலபதி, மனநல மருத்துவர்:
மனநல மருத்துவர்கள் அதிகம் சந்திக்கும் கேஸ் இதுதான். இதற்குப் பெயர் எண்ண சுழற்சி நோய் (Obsessive compulsive dis order) வீட்டை பூட்டி சாவியை நீங்கள்தான் வைத்திருப்பீர்கள் இருந்தாலும் பூட்டி விட்டோமா? என சந்தேகப்படுவீர்கள். நீங்கள் சந்தேகிப்பது தவறு என உங்களுக்கும் தெரியும். இருந்தாலும் அந்த எண்ணம் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருப்பதால் மீண்டும் சென்று பூட்டை இழுத்துப் பார்ப்பீர்கள்.

மூளையில் நியூரோ ட்ரான்ஸ் ஃபிட்டர் எனும் வேதிப் பொருட்களின் ஏற்றத் தாழ்வினால் இப்பிரச்னை ஏற்படுகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பாகுபாடெல்லாம் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம். இதற்கு மாத்திரைகள் இருக்கின்றன. அது மட்டுமின்றி சைக்கோதெரபி எனப்படும் கவுன்சிலிங் முறையிலும் இவை குணமாக்கப்படும்.

(வாசகர்களுக்கு ஏற்படும் இதுபோன்ற சந்தேகங்களை எழுதி அனுப்புங்கள். தகுந்த வல்லுனர்களின் விளக்கங்கள் பிரசுரிக்கப்படும்.)