என் சமையலறையில்* முட்டைக்கோஸை வேகவிடும்போது, அத்துடன் சிறிது இஞ்சித் துருவலை சேர்த்தால், அதில் ஏற்படும் பச்சை வாடை மறைந்து விடும். ஜீரணத்திற்கும் நல்லது. 

* பூண்டை லேசான சுடுநீரில் சிறிது நேரம் போட்டுவிட்டு பின்பு உரித்தால் தோல் எளிதாக நீங்கும்.
- ஹெச். ராஜேஸ்வரி, மாங்காடு.

* தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணம் மிக அதிகமாக இருக்கும்.

* வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, சிறிது புளி வைத்து நைசாக அரைத்து பிரெட் ஸ்லைசில் இருபுறமும் தடவி ரோஸ்ட் செய்தால் சுவையாக இருக்கும்.

* உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து  இஞ்சி, பச்சைமிளகாய், சிறிது தேங்காய் சேர்த்து அரைத்து சிறிது கடலைமாவு  தூவி உருளைக்கிழங்கை பிசறி ரோஸ்ட் செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது  ஊறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடித் தேங்காய்த்துருவல், ஒரு கரண்டி பழைய  சாதம் போட்டு அரைத்தால் ஆப்பம் மிகவும் மிருதுவாக இருக்கம்.
- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* வெந்தயம், சீரகம், மிளகு இவற்றை பொன்முறுவலாக வறுத்தெடுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு காரக்குழம்பு வைக்கும்போது கொதித்து வரும்போது இரண்டு டீஸ்பூன் போட்டால் சூப்பர் டேஸ்ட்தான்.

* மாவு நெகிழ்ந்து விட்டால்  அரிசி மாவு போன்றவற்றைச் சேர்க்காமல் ஒரு பிடி மெது அவலைக் கலந்து  தட்டினால் இலகுவாகவும், வடையின் மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும்.
- ஆர். மீனாட்சி, திருநெல்வேலி.

* கொசுத் தொல்லை அதிகமாக இருக்கும் நேரத்தில் அதை நீக்க வேப்பிலையை அரைத்து தண்ணீரில் கலந்து வீட்டைத் துடைப்பது
நல்லது.
- கே. ராகவி, திருவண்ணாமலை.

* ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோளமாவு சேர்த்தால் ஆம்லெட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
- கே. அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

* உளுந்து வடைக்கு அரைக்கும்போது மிக்சியில் முதலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுப் பின் அதன்மேல் உளுத்தம்பருப்பைப் போட்டு அரைத் தால், அரைத்த மாவை மிக்சியிலிருந்து வழித்தெடுப்பது எளிதாக இருக்கும். பின்பு மிக்சியை கழுவுவதும் சுலபம்.
- ஆர். அம்மணி, தேனி.

* உளுந்து வடைக்கு மாவு அரைத்து அதனுடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வடைத் தட்டினால் வடை ருசியாக இருக்கும்.

* அடைக்கு மாவு அரைக்கும் போது ெகாஞ்சம் ஜவ்வரிசியை கலந்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.