பால்...பால்... மேலும் பால்...இயற்கையான சூழ்நிலைகளில் இருந்து வளரும் புற்களை தின்று வளரும் மாடுகளில் இருந்து பெறப்படும் பால் என்பதால் அரோமா பால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கிறது. சுகாதார உணர்வு மற்றும் சுவையில் அரோமா  பால் சமரசம் செய்துகொள்வதில்லை. பதப்படுத்தப்பட்ட பால், இரண்டு முறை  பதப்படுத்தப்பட்ட பால், தரப்படுத்தப்பட்ட பால், ஆடை நீக்கிய பால், கிரீம்  பால் என பல வகைகளில் கிடைக்கிறது அரோமா.

உதாரணத்திற்கு அரோமாவின்  பதப்படுத்தப்பட்ட பாலானது இரண்டு முறை பதப்படுத்தப்பட்ட பால் மற்றும்  தரப்படுத்தப்பட்ட பால் இடையே சரியான சமநிலையில் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட பால் ஆரோக்கியமானது.சுவை மற்றும் நன்மைகளைக் கொண்டு  இருக்கிறது. கொழுப்பு நீக்கப்பட்ட இந்த பால் உடம்பு கொழுப்பை  உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

இதுமட்டுமின்றி தயிர், மோர், வெண்ணெய்,  நெய், பனீர் வகைகளும் அரோமாவில் கிடைக்கின்றன. வாசனைப் பால், ஸ்கிம்டு பால்  பவுடர், முழு பால் பவுடர் போன்றவையும் கிடைக்கின்றன. பால் பொருட்களின் தன்மை அது செய்யப்படும் பாலைப் பொறுத்து அமைகிறது. பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடத்திற்கு இது முக்கியமான விஷயம்.

பாலானது சீக்கிரம் அதனைக் கெட வைக்கும் பல நுண்ணுயிரிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதால் அதனை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். அவற்றை தரம் வாய்ந்த கருவிகள் கொண்டு தொழிற்சாலையில் அதனைப் பாதுகாக்கிறார்கள். பலதரப்பட்ட எடையில் பால் டெட்ரா பாக்கெட்ஸ் மற்றும் ஹை டென்சிட்டி பாலித்தீனால் செய்யப்பட்ட பாட்டில்களில் பால் உயர்தரமான ஃபில்பேக் மிஷினால் நிரப்பப்படுகிறது. முறையாக நிரப்பப்பட்ட இந்த பாக்கெட்டுகளும் பாட்டில்களும் இன்சுலேட் செய்யப்பட்ட ட்ரக்குகளில் ஏற்றிச் செல்லப்பட்டு நகரத்தின் உட்புற பகுதிகளுக்கும் மற்றும் கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.