தேன் குழல்



என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 3 கப்,
வறுத்து அரைத்த உளுந்து மாவு - 1/2
கப், வெண்ணெய் - 50 கிராம்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?  

உளுந்துடன் அரிசி மாவு, பெருங்காயத் தூள், சீரகம், வெண்ணெய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுப் பிசையவும். எண்ணெயை காய வைத்து தேன்குழல் அச்சில் மாவை அடைத்து பிழியவும்.வெண்ணெய்க்கு பதில் வனஸ்பதி சேர்க்கலாம். அரிசியையும் உளுந்தை யும் மெஷினில் கொடுத்து அரைக்கலாம். அரிசியைக் கழுவி நிழலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து உடனே செய்யலாம். இது இன்னும் வெள்ளையாகவும் கரகரப்பாகவும் இருக்கும்.