ரவா வடை



என்னென்ன தேவை?

ரவை - 1 கப்,
மைதா - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பொடித்த மிளகு - 2 டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?  

நெய், உப்பு சேர்த்து நன்றாக கை நுனி விரலில் சேர்த்துக் கலக்கவும். அதில் வெண்ணெயைப் போட்டு அத்துடன் மைதா, ரவை, சீரகம், மிளகுத் தூள் சேர்த்துக் கலக்கவும். பின் தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, இந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டையை எடுத்து அதிகம் கனமாகவும் இல்லாமல் மெல்லியதாகவும் இல்லாமல் வாழை இலையின் மேல் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்படி எல்லா மாவையும் தட்டி பொரிக்கவும். வடித்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். கரகரப்பாக இருக்கும். இந்த ரவா வடையை 4 நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.