மினி சேவ் சமோசா



என்னென்ன தேவை?

ஓமப்பொடி - 1/2 கப் (கடையிலும் வாங்கலாம்... வீட்டிலும் செய்யலாம்),
கொப்பரை தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - தேவைக்கு,
முந்திரி அல்லது வேர்க்கடலை தூள் - 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 15,
கரம் மசாலா, மாங்காய் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

மேல் மாவுக்கு...


மைதா - 1 1/2 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வெதுவெதுப்பான தண்ணீர் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?  


ஓமப்பொடியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். உப்பு தவிர, மேலே கொடுத்திருக்கும் எல்லா மசாலா பொருட்களையும்
1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும். அது ஆறியதும் அதையும் ஒரு சுற்று மிக்ஸியில் அரைக்கவும். இதை ஓமப்பொடியுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.மைதா மாவுடன் உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். அதில் இருந்து சிறு உருண்டையை எடுத்து சிறிய பூரியாக உருட்டி, அதைப் பாதியாக வெட்டி முக்கோண வடிவத்துக்கு செய்யவும். அதன் மத்தியில் சிறிது ஓமப்பொடி
பூரணத்தை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு மூடவும். கடாயில் எண்ணெய் காய வைத்து சமோசாக்களை 5 அல்லது 6 எண்ணிக்கையில் போட்டு பொரித்து எடுக்கவும். சாஸுடன் பரிமாறவும்.