சோராபாலி



என்னென்ன தேவை?

கடலை மாவு - 1 கப்,
உளுந்து மாவு - 1/4 கப்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

அலங்கரிக்க...

மிளகாய் தூள், கறுப்பு உப்பு - தேவைக்கு. (கறுப்பு உப்பு பெரிய கடைகளில் கிடைக்கும்).  

எப்படிச் செய்வது?  

கடலை மாவுடன் உப்பு, எண்ணெய், பேக்கிங் பவுடர் சேர்த்து, வறுத்து பொடித்த உளுந்து மாவு, அரை கப் லேசான சுடு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை மூடி போட்டு 1 மணி நேரத்துக்கு வைத்திருக்கவும். பிறகு மாவை எடுத்து கை விடாமல் 5 நிமிடம் பிசையவும். மாவை 1/2
இஞ்ச் கனத்தில் சப்பாத்தியாக உருட்டி, கத்தியால் கட் செய்து, சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். பொரிக்கும் போது மத்தியில் உப்பிய பலூன் மாதிரி வரும்.பொரித்து எடுத்த பின் கறுப்பு உப்பு, மிளகாய் தூள் தூவி பரிமாறவும்.