காட்டியா



என்னென்ன தேவை?

கடலை மாவு - 1 1/2 கப்,
ஓமம் - 1/4 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?  

கடலை மாவை சலித்துக் கொள்ளவும். அத்துடன் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும், மிதமான தீயில் பெரிய கண் உள்ள அச்சில் மாவைப் போட்டு பிழிந்து, பொரித்து எடுக்கவும்.பெரிய முள் கண் உள்ள அச்சாக இருக்க வேண்டும்.