ஹாட் அண்ட் நட் ஃபிங்கர்ஸ்



என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 1 கப்,
ரவை - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
பிரெட் தூள் - 1 கப்,
கொத்த மல்லித்தழை - சிறிது,
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
(முந்திரிக்கு பதில் பாதாம், வேர்க்கடலையும் சேர்க்கலாம்).
 
எப்படிச் செய்வது?  

பாசிப் பருப்பை நன்கு வேக வைத்து நீரை வடிக்கவும். இத்துடன் ரவை, உப்பு, தூள்கள், கொத்தமல்லித்தழை, பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து கெட்டியாகப் பிசையவும். இக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விரல் போல் நீளமாக உருட்டிக் கொள்ளவும். இதனை சோள மாவில் தண்ணீர் கலந்து கரைத்து அதில் டிப் செய்து பிரெட் தூளில் புரட்டி எண்ணெய் காய வைத்து பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்டினியுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.இந்த நட்ஸ் ஃபிங்கர்ஸை 2 நாட்கள் முன்பாக செய்து வைக்கலாம். பாசிப் பருப்பை வேக வைப்பதற்கு பதில் ஊற வைத்து கரகரப்பாக அரைத்து ரவை, மற்ற எல்லாவற்றையும் சேர்த்து உருண்டை செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம். விருந்தினர் வரும்போது அல்லது தேவைப்படும்போது சோளா மாவில் டிப் செய்து பொரித்தெடுத்து சூடாகப் பரிமாறலாம்.