ரிப்பன் பக்கோடா



என்னென்ன தேவை?

அரிசி மாவு - 200 கிராம்,
கடலை மாவு - 75 கிராம்,
பொட்டுக்கடலை மாவு - 3 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?  

எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். ரிப்பன் பக்கோடா அச்சில் மாவைப் போட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புழுங்கலரிசி ரிப்பன் பக்கோடா
புழுங்கலரிசி - 1 கப்,
கடலை மாவு - 1 கப்,
நெய் - 3 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள்,
மிளகாய் தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து சிறிது கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு, நெய் சேர்த்துப் பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகுத் தூள் சேர்த்தும் செய்யலாம்.