காரா பூந்தி



என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1 கப்,
கடலை மாவு - 4 கப்,
மிளகாய் அல்லது மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,
பெருங்காயம், சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு - தலா 50 கிராம்,
கறிவேப்பிலை - தேவைக்கு மற்றும் காரா பூந்தி தட்டு அல்லது கரண்டி.

எப்படிச் செய்வது?  

வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து, வடித்து, தனியாக வைக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், சமையல் சோடா, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து இளகிய முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை வைத்து தேய்க்கவும். பூந்தி  பொரிந்து மேலே வரும் போது வடித்து எடுத்து வேர்க்கடலை கலவையைக் கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.

மைதா காரா பூந்தி

என்னென்ன தேவை?

மைதா - 3 கப்,
கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, அரிசி மாவு - தலா 1/2 கப்,
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?  


எண்ணெய் தவிர மேலே கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூந்தி கரண்டியில் அல்லது தட்டில் கொஞ்ச கொஞ்சமாக மாவை விட்டு தட்டி தேய்த்து பூந்திகளாக பொரித்தெடுக்கவும்.