ஓட்ஸ் மினி தட்டை



என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த உளுந்து மாவு - 1/4 கப்,
ஓட்ஸ் - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 2,
கரகரப்பாக பொடித்த மிளகு, வெள்ளை எள் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.  

எப்படிச் செய்வது?  

ஓட்ஸை லேசாக வறுத்து பொடித்து வைக்கவும். பச்சரிசி மாவுடன் எண்ணெய் தவிர நன்றாக பொடித்த உளுந்து மாவு, ஓட்ஸ் மற்றும் எல்லா பொருட்களையும் வெண்ணெய் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். அதில் ஓர் உருண்டையை எடுத்து பெரிய ரொட்டியாக திரட்டவும். அதை விருப்பமான வடிவத்தில் பிஸ்கெட் மாதிரி கட் செய்து சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். அதை வடித்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.
வி பாட்டில் மூடி அல்லது பிஸ்கெட் கட்டரால் வெட்டலாம்.