புதினா -உருளைக்கிழங்கு ஓமப்பொடி





என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 1,
கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப்,
ஓமம் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பொடியாக நறுக்கிய புதினா - 1 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2.  

எப்படிச் செய்வது?  

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் புதினா, உப்பு, எலுமிச்சைச் சாறு, பச்சை மிளகாய் சேர்த்து மையாக அரைத்து இந்த விழுதை மசித்து கிழங்கு கூட சேர்த்து இத்துடன் வெண்ணெய், ஓமம், அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஓமப்பொடி அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். வெந்து ஆறியதும் எடுத்து வைக்கவும். ஜீரணத்துக்கு நல்லது.