சீஸ் லிங்ஸ்



என்னென்ன தேவை?

மைதா மாவு - 3 கப்,
கடலை மாவு - 1 கப்,
துருவிய சீஸ் - 1/2 கப்,
பால் - தேவைக்கு,
மோர் - 1/2 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
சுக்குத் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?  

மைதா, கடலை மாவுடன் உப்பு கலந்து அதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கிச் சேர்க்கவும். அதில் தேவையான பால் சேர்க்கவும். அத்துடன் துருவிய சீஸ், மோர், தூள்கள் எல்லாவற்றையும் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். மாவை சப்பாத்தி போல் மெல்லியதாக விரித்து தேய்த்து
கத்தியால் விருப்பமான வடிவத்தில் வெட்டி பொரித்து எடுக்கவும். எண்ணெயை வடித்து டப்பாவில் போட்டு வைக்கவும்.சீஸில் உப்பு இருப்பதால் உப்பை அளவாகப் போடவும். சப்பாத்தி உருட்டும்போது அதிக கனமாக இருக்கக் கூடாது.