டில் கிராக்கர்ஸ் (எள்ளுப் பட்டாசு)



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/4 கப்,
வெல்லம் - 20 கிராம்,
தண்ணீர் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு,
எள் - 1/2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.  

எப்படிச் செய்வது?
 

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, எண்ணெய், எள், மிளகாய் தூள் சேர்த்து கெட்டியாக பிசையவும். இதை சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் மாவை சப்பாத்தியாக தேய்த்து மெல்லிய பிஸ்கெட், டைமண்ட் ஷேப்பில் வெட்டி மத்தியில் முள்ளு கரண்டியால் குத்தி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எள் வாசனையுடன் சுவையாக இருக்கும்.