தட்டை



என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப்,
பொட்டுக் கடலை மாவு - 1/2 கப்,
வறுத்து பொடித்த உளுந்து மாவு - 1/4 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்து உடைத்த வேர்க்கடலை - 25 கிராம்,
ஊற வைத்த கடலைப் பருப்பு - 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
எள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?  

வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக உடைக்கவும். கடலைப் பருப்பை ஊற வைத்து வடித்து வைக்கவும். பச்சரிசி மாவை வறுத்து ஆற விட்டு சலித்து இத்துடன் பொட்டுக் கடலை மாவு, உளுந்து மாவு, உடைத்த வேர்க்கடலை, கடலைப் பருப்பு, மிளகாய் தூள், எள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக சிறு உருண்டைகளாக எடுத்து வெள்ளைத் துணியில் சிறிய தட்டைகளாக தட்டவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கரகரப்பான தட்டை ரெடி. தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பாக செய்யலாம்.