ஜன்னல் ஓரம்



காதல், சென்டிமென்ட் என விக்ரமன் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இந்தப் படத்திலும் இருக்கிறது. பழநியில் இருந்து பண்ணைக்காடு செல்லும் பஸ்ஸின் டிரைவர் பார்த்திபன். கண்டக்டர் விமல். நாளொரு மேனியும் பொழுதோரு வண்ணமுமாக ஜாலியாக வேலையை ரசித்து செய்யும் இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு விபத்து மூலம் பிரச்சனை வருகிறது. விமல் ‘உள்ளே’ செல்கிறார். அவர் எப்படி வெளியே வருகிறார் என்பது மீதிக் கதை.

பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மணிஷா, ராஜேஷ், சஞ்சய் பாரதி, ரமணா, யுவராணி என படத்தில் நட்சத்திரங்களின் அணி வகுப்பு அதிகம். ஆனால், அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்க வைத்திருப்பதுதான் படத்தின் பலம். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் தேன். யாரும் எதிர்பார்க்காத வகையில் டுவிஸ்ட் வைத்திருப்பதால் ரசிக்க முடிகிறது. யதார்த்தத்தை மீறாத படைப்பு கொடுத்த ஒரே காரணத்துக்காகவே இயக்குநர் கரு.பழனியப்பனை பாராட்டலாம்.