ஆக்ஷன் வீரன்



நேற்று வந்த புதுமுக நடிகராக இருந்தாலும் சரி, பழம்பெரும் நடிகராக இருந்தாலும் சரி ஆக்ஷன் படங்களில் நடிக்க கண்ணை மூடிக்கொண்டு டபுள் ஓ.கே சொல்வார்கள். அந்த வகையில் புருஸ்லீ, ஜாக்கிசான் போன்ற ஆக்ஷன் ஹீரோக்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். அந்த வரிசையில் டோனிஜாவுக்கும் முக்கியத்துவம் உண்டு.


டோனிஜா ஏற்கனவே நடித்த ‘ஓங் பேக் 1’ படம் உலகள வில் மாபெரும் வெற்றி அடைந்தது. சுமார் 10 வருட இடைவெளிக்குப் பிறகு முதல் பாகத்தில் வேலை செய்த இயக்குநர் பிரச்சாய் பிங்கே, ஸ்டண்ட் இயக்குநர் கிட்டிகேரி, டோனிஜா ஆகியோர் 2ம் பாகத்தில் இணைந்துள்ளார்கள். இந்தப் படத்தை தமிழில் ‘கும்கி வீரன்’ என்று வெளியிடுகிறார்கள். தாவித் தாவி சண்டை போடும் சண்டைக் காட்சிகள், 20 நிமிட பைக் சேஸிங் காட்சிகள் ரசிகர்களை பரவசத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லுமாம். இண்டோ ஓவர்சீஸ் நிறுவனம் சார்பில் பிரோஸ் மற்றும் ஆர்ட் ஸ்டுடியோவைச் சேர்ந்த ஜி.ஆர்.ஆர்.ரகு, சிவம், செந்தில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

- ரா