நிவேதா தாமஸ் 5பன்ச்சு



அப்பா சாஜு தாமஸ், துபாயில் தொழிலதிபர். அம்மா இல்லி தாமஸ், குடும்பத்தலைவி. தம்பி நிகில் தாமஸ். யாரும் சினிமாவில் கிடையாது. இவர் மட்டுமே நடிக்கிறார்.

ஜெயராம் மகளாக 12 வயதில், ‘வெருதே ஒரு பார்யா’ மலையாளப் படத்தில் அறிமுகமானார். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசு விருது பெற்றார். ‘வர்ணஜாலம்’ படத்தில், சின்ன வயது சதா வேடத்திலும் நடித்தார்.

‘குருவி’ படத்திலும் நடித்த இவருக்கு ‘போராளி’ நல்ல அடையாளம் கொடுத்தது. ‘நவீன சரஸ்வதி சபதம்’ மூலம் ஹீரோயினாகி விட்டார். ‘ஜில்லா’ படத்தில் விஜய் தங்கையாக நடித்து வருகிறார். தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக ‘ரன் ராஜா ரன்’ படத்திலும் நடிக்கிறார்.
 
சென்னையிலுள்ள தனியார் கல்லூரி யில் பி.இ ஆர்க்கிடெக்ட் முதலாண்டு படிக்கிறார். புல்லட்டில் சீறிப் பாய்வார். பேட்மின்டன் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.
 
‘மை டியர் பூதம்’, ‘அரசி’ உள்பட பல டி.வி தொடர்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படுகிறார். டி.வியிலும், சினிமாவிலும் சொந்தக்குரல் என்பதால், பின்னணி பாட ஆசைப்படுகிறார்.

 - தேவராஜ்