ஜடாயுவுக்கு சகல மரியாதை



ராமன் எத்தனை ராமனடி!


காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ளது திருப்புட்குழி. இத்தலத்தின் மூலவர் விஜய ராகவப் பெருமாள் தன் மடியின் மீது ஜடாயுவை வைத்தபடி அருள் பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயு வுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளன. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 58வது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அசையும் உறுப்பு களைக் கொண்ட கீல்குதிரை வாகனம் இருக்கிறது.

சிற்பக் கலையில் இது ஒரு அதிசயம். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டது இந்த கீல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.  ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர் களுக்கு அமாவாசையன்று இத்தலத்தில் தர்ப்பணம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆண்டாளாக ராமர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது வடுவூர். இத்தல கருவறையில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார் ராமர். ராமரின் அவதார  நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் நகர் வலம்  புறப்படுகிறார். ராம நவ மியை ஒட்டி 10 நாட்கள் பிரம் மோற்ஸ வம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல் யாணம், 9ம் நாள் தேர்த் திருவிழா. ஐந்தாம் நாளில், ராமர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருட சேவையில் சேவை  சாதிக்கிறார்.

தொகுப்பு: ந.பரணிகுமார்