வளம் தரும் வாஸ்து



இட்லி, சப்பாத்தி  மிருதுவாக வரவேண்டுமா..?

போர்டிகோவை நல்லவிதமாக அமைக்க தெரிந்துகொண்ட நாம், இதர முக்கியமான அறைகளை எப்படி அமைப்பது என அறிந்து கொள்வோம்.

வீட்டின் முக்கிய பகுதிகளாக சமையலறை, சாமான்கள் வைப்பறை, பூஜையறை, படுக்கையறை, குளியலறை,  Home Theatre, கூடுதல் படுக்கையறை மற்றும் அலுவலக அறையையும்
அமைக்கிறோம்.

சமையலறை: தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ‘அக்னி மூலை’ எனப்படும் தென்கிழக்கில் சமையலறை இருக்க வேண்டும் என தெரிந்து
அமைக்கின்றனர்.

வடக்கு சாலை உள்ள வீட்டிற்கு பெரும்பாலும் தென்கிழக்கிலேயே
சமையலறையை அமைக்க முடியும்.

கேரளத்தில் வடகிழக்கு எனப்படும் ஈசான்யத்தில் சமையலறையை
அமைக்கும் வழக்கம் உள்ளது.

வடக்கு வாயில் வீட்டிற்கு வடமேற்கு பகுதியிலும் ‘வாயவியம்’ பகுதியிலும் அமைக்கலாம். இப்பகுதியில் சமையலறை அமைக்கும்போது, சமையல் ருசியாகவும், அடுத்தடுத்து விருந்தினர்
வருகையால் அடிக்கடி அதிக அளவில் உணவு சமைக்கும் நிலையும், ஓய்வில்லாத சமையறையாகவும் இருக்கும்!
சமையலறையை தென்கிழக்கில் அமைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்:

சமையலறையில் மேடை வடக்கு சுவரை தொடாமல், லு அடி காலிவிட்டு 2 அடி அகலத்தில் அமைத்துக் கொள்ளலாம். பலரும் ஈசான்யத்தில் தண்ணீர் வேண்டும் என்பதற்காக பாத்திரம் கழுவும் சிங்க்கை வடகிழக்கில் அமைப்பார்கள். இது முற்றிலும் தவறு. பாத்திரம் கழுவும் சிங்க், சமையல் செய்யும் ஸ்டவ் அருகே அமைக்கும்போது, சிங்கிலிருந்து பாக்டீரியாக்கள் அருகில் சமைத்த உணவுகளுடன் கலந்துவிடும் வாய்ப்பு அதிகம்.

எனவே பிளாட்ஃபாமின் வடகிழக்கில் சிங்க்கை அமைக்காமல், படத்தில் காட்டியவாறு தெற்கு சுவரை ஒட்டி ஜன்னலுக்கு அருகே அமைக்கும்போது மேற்கூறிய பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். தயாரித்த உணவுப் பொருட்களை கிழக்கு பிளாட்பாமில் வைக்கவும் முடியும். இது புதிய கருத்தாக இருப்பினும், தொலைநோக்கு பார்வையில் நன்மையாகவும், வசதியாகவும் இருப்பதை உணர முடியும்.
பல வீடுகளில் மாவு அரைக்கும் கிரைண்டரைத் தவறான இடத்தில் அமைப்பதால், அந்த வீடுகளில் இட்லி, சப்பாத்தி போன்றவை மிருதுவாக இன்றி, கல் போன்று கெட்டியாக இருக்கும்.

இதற்கு சமைப்பவர்களின் கைவண்ணம் காரணமாக இருக்காது. கிரைண்டரை வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு பகுதியில் வைப்பதால் இப்பிரச்னைகள் வரும்.  மாறாக, வாயு பாகம் எனப்படும் மேற்கு, வடமேற்கு பகுதியில் அமைத்தால் அப்பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியா, மாவுடன் கலந்து (திமீக்ஷீனீமீஸீtணீtவீஷீஸீ)  கொதித்து பூ போன்ற இட்லியும், மிருதுவான சப்பாத்தியும் கிடைக்கும்.

வேறு திசைகளில் கிரைண்டர் வைத்தவர்கள், தற்காலிகமாக வடமேற்கு பகுதியில் வைத்து 2, 3 நாட்கள் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ள முடியும். ஸ்டோர் ரூம்: சமையலறையின் மேற்கு பகுதியில் படத்தில் காட்டியவாறு, ஸ்டோர் ரூம் அமைத்து, அதில் ஸ்லாபுகளை தெற்கு / மேற்கில் அமைத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். ஸ்டோர் அறைக்கு தென்கிழக்கில் வென்டிலேட்டர் அமைப்பது சிறப்பாகும்.

சமையலறை சுத்தம்: சமையலறையைத் தொடர்ந்து உபயோகிப்பதால் அசுத்தமடைவதோடு, கிருமிகள், பூச்சிகள், கரப்பான் பூச்சிகளை வரவழைக்கும். எனவே, சமையலறையின் வடகிழக்கு பகுதியில் சிறு துவாரம் அமைத்து அவ்வப்போது நீரால் கழுவி தள்ளிவிடலாம். பிறகு அந்த துவாரத்தை அடைத்து விடலாம். அதனால் சமையலறை சுத்தமாக இருக்கும்.

மாடர்ன் சமையலறை என்ற பெயரில் பிளாட்பாரம் பகுதியின் கிழக்கு சுவரில் கப்போர்டு அமைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. சமையலில் ஈடுபட்டுக்கொண்டே கிழக்கு கப்போர்டிலிருந்து பொருட்களை எடுக்கும்போது, துணிகளில் தீ பட்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. ஆகவே, இடத்தை முழுவதும் உபயோகப்படுத்தும் நோக்கில் கிழக்கு சுவரில்
கப்போர்டு அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மின்சாதனம்: சமையலறையில் தலைக்கு மேல் மின்விசிறியை அமைக்காமல் வடமேற்கு / தென்மேற்கில் சுவரில் பொருத்திக் கொள்ளலாம். தலைக்கு மேல், விதானத்தில் ஃபேன் பொறுத்தினால்,
காற்று ஸ்டவ் ஜ்வாலையை அலைக்கழித்து எரிபொருளை விரயமாக்கும். கரப்பான் தொல்லை: சமையலறையில் கரப்பான் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே இரவில் சமையலறையில் குறைந்த ஒளி பல்பு ஒன்றைத் தொடர்ந்து எரிய விட்டால், வெளிச்சம் காரணமாக கரப்பான் நடமாட்டம் குறைந்து, கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட முடியும்.
(தொடரும்)

ஆன்மிக அறிவுத்திறன் போட்டி முடிவுகள்

* டி.ஏ.சுப்பிரமணியன், திருநின்றவூர், சென்னை.
* எஸ்.சுப்பிரமணியன். திருப்பூர்.
* டி.கே.பூபதி, கோவில்பட்டி, தூத்துக்குடி.
* எஸ்.ஹெச்.லதா, வி.வி.புரம், பெங்களூரு.
* கே.செல்வராஜ், துண்டலம், சென்னை.
* ந.கோயில்பிள்ளை, செம்பூர், ஆழ்வார்திருநகரி.
* வி.மீனாள், அமராவதிபுதூர், சிவகங்கை.
* கோ.பே.இளந்திரையன், நுங்கம்பாக்கம், சென்னை.
* வி. உமாமகேஸ்வரி, ஜாகீர் அம்மாபாளையம், சேலம்.
* கே.ஆண்டவர், அருப்புக்கோட்டை.
* அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி.
* எஸ்.சுரேஷ்பாபு, பண்டம் (வெஸ்ட்) மும்பை.
* ஜே.விஜயலட்சுமி, நாகவேடு கிராமம், அரக்கோணம்.
* எம்.சரஸ்வதி, ராசிபுரம், நாமக்கல்.
* ஆர்.திவ்யா, ஒழுகினசேரி, நாகர்கோவில்.
* ஆர்.இந்திரா, கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம்.
* சி.சுகுணா, மும்பை.
* பி.தங்கவேல், குந்தாமக்கட்டி, நீலகிரி.
* வ.முத்துலட்சுமி, பரமக்குடி, ராமநாதபுரம்.
* நா.செல்வராசு, புதுச்சேரி.
* ஆர்.தனலட்சுமி, மா.சாவடி, தஞ்சாவூர்.
* நர்மதா சுந்தர்ராஜன், கலைநகர், மதுரை.
* எம்.என்.முத்துராமன், காரைக்குடி.
* இரா.பார்வதி, காஞ்சிபுரம்.
* ஆர்.ரத்தினம். ராஜபாளையம்.